New York Flood உலக காலநிலை செய்திகள்
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இரவு முழுவதும் இடைவிடாமல் கடும் மழை பெய்து வருகின்றது. விமான நிலையம் மற்றும் ரயில் நிலைய சுரங்க பாதைகளை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
நியூயோர்க் நகரில் சுமார் 420 ரயில் நிலையங்கள் உள்ளன. ரயில்களும் இரத்து செய்யப்பட்டதால் பல மணி நேரம் பயணிகள் பாரிய பிரச்சனைக்கு முகங்கொடுத்துள்ளனர்.
விமான நிலையமும் மூடப்பட்டதால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தடைப்பட்டுள்ளனர்.

நியூயோர்க் நகர சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என நியூயோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.