Mandous Cyclone உலக காலநிலை செய்திகள்
வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் அதிதீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து கடந்த ஆறு மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்தப் புயலானது , சென்னைக்கு தென்கிழக்கில் 550 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இதனிடையே மாண்டஸ் புயல் அதிதீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை காலை அதிதீவிர புயலாகவே மாண்டஸ் கரையை கடக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kidhours – Mandous Cyclone
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.