Liba Cyclone உலக காலநிலை செய்திகள்
டேனியல் புயல் காரணமாக கிழக்கு லிபியாவில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் இராணுவ உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லிபியாவின் டேர்னா நகர் அதிகளவான பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் அந்த பகுதி அபாய வலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அப் பகுதியில் போக்குவரத்து, மின்சாரம் என்பன தடைப்பட்டிருப்பதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டெர்மா நகரில் மாத்திரம் இதுவரையில் ஆயிரத்து 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.டேனியல் புயல் காரணமாக, பெரும்பாலான சொத்துகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Kidhours – Liba Cyclone
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.