Landslide Affects உலக காலநிலை செய்திகள்
தென் ஆசிய நாடான பாகிஸ்தானின் சில பகுதிகள் தற்போது பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுடன் பாதிப்புறு இருக்கிறன்ற பிரதேச மக்களுக்கான முன்னெச்சரிக்கை மற்றும் முன்னாயத்த நடவடிக்கைகளை அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
குறித்த அனர்த்த சம்பவமானது பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் அப்பர் டிர் மாவட்டத்தில் நேற்று திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு வீட்டின் மேல் கூரை சரிந்தது.
இந்தச் சம்பவத்தில் 3 பெண்கள், 6 குழந்தைகள், 3 ஆண்கள் என மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர்.
உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் , இந்த விபத்தில் உயிரிழந்த 12 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தாக இந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Kidhours – Landslide Affects
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.