Heavy Rainfall in Meddle East உலக காலநிலை செய்திகள்
மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனித பாலைவன நாடான சவுதி அரேபியாவில் ஆண்டுக்கு மிக குறைவான மழைச்சியே காணப்படுகின்றது.
சராசரியாக ஆண்டுக்கு 10 சென்டி மீட்டர் மழை பெய்வதே அரிது . தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக சவுதி அரேபியாவில் அவ்வப்போது கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகள் அனைத்தும் ஆறுகள் போல் காட்சி அளித்தன.
இந்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஓமனில் 21 பேரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் கன மழை பெய்து வயதாக ஊடகங்கள் செய்தி வெளியீட்டுள்ளன.
Kidhours – Heavy Rainfall in Meddle East
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.