Flood Warning In Srilanka
இலங்கையில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையானது மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனால் இலங்கையின் பல பகுதிகளில் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வெப்பவலயங்களுக்கு இடையிலான ஒடுங்கு வலயம் இலங்கையின் வானிலையில் தாக்கம் செலுத்துவதனால் மழையுடன் கூடிய காலநிலையானது மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனால் இலங்கையின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எனவே மண்சரிவு ஏற்படக் கூடிய இடங்கள், ஆற்றங்கரைகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களையும், மலைப்பகுதிகளில் வீதிகளை பயன்படுத்தும் சாரதிகளையும் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்களின் போது மரங்கள், வயல்கள், தேயிலை தோட்டங்கள், நீர் நிலைகளில் நிற்பதை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த நாட்களில் பெய்த கடும் மழை காரணமாக பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Kidhours – Flood Warning In Srilanka
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.