Flood Warning in Dubai உலக காலநிலை செய்திகள்
அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பாதிப்பை தொடர்ந்து மீண்டும் டுபாயில் (ஐக்கிய அரபு அமீரகத்தில் ) கனமழை பெய்து வருவதாகவும் கனமழையுடன் இடி, மின்னல் ஆகியவையும் ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, இன்றும், நாளையும் கனமழை பெய்ய கூடும் என ஐக்கிய அரபு அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் குடியிருப்புவாசிகள், வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
Kidhours – Flood Warning in Dubai
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.