Tamil Climate News Earthquake சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
![நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது Tamil Climate News Earthquake # World Best Tamil Climate News Today 1 Tamil Climate News Earthquake](https://www.kidhours.com/wp-content/uploads/2022/06/IMAGE_1655879861.jpg)
பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து சுமார் 44 கிமீ (27 மைல்) தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. லி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியதுடன் 1,500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
பக்டிகா மாகாணத்தில்தான் பெரும்பாலான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கோஸ்ட், பக்டிகா மாகாணங்களில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ள நிலையில் , பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
![நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது Tamil Climate News Earthquake # World Best Tamil Climate News Today 2 Tamil Climate News Earthquake](https://www.kidhours.com/wp-content/uploads/2022/06/125572299_gettyimages-1241459462.jpg)
ஆப்கானிஸ்தான் தலீபான் ஆட்சியை கைப்பற்றிய பிறகு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் பலவும் அந்த நாட்டை விட்டு வெளியேறிவிட்டதனால், மீட்பு பணிகளில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
![நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது Tamil Climate News Earthquake # World Best Tamil Climate News Today 3 Tamil Climate News Earthquake](https://www.kidhours.com/wp-content/uploads/2022/06/22-62b309eccd2cd.jpg)
இந்நிலையில் பக்டிகா மாகாணங்களில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள், ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படும் காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.