Cyclone Affects 82 Dead உலக காலநிலை செய்திகள்
கிழக்காசியா நாடான பிலிப்பைன்சில் உருவான டிராமி புயலை அடுத்து ஏற்பட்ட இயற்றை அனர்த்தங்களில் சிக்குண்டு, 82 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் பிலிப்பைன்சின் இசபெலா, இபுகாவோ உள்ளிட்ட பல மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு பெய்த கனமழையால் பல நகரங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன .
கனமழையை தொடர்ந்து படங்காஸ் மாகாணத்தில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதுடன் இந்த நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில், தற்போது அங்கு மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.அதனை அண்டிய பிரதேச மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி காணாமற் போயுள்ளதால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை உயர்வடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kidhours – Cyclone Affects 82 Dead
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.