Cyclone Affected 28 Died உலக காலநிலை செய்திகள்
பங்களாதேஷில் சூறாவளியினால் குறைந்தபட்சம் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
சித்ராங் சூறாவளி நேற்றுமுன்தினம் பங்களாதேஷை தாக்கியது. இதனால் 28 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 10,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் மரங்கள் வீழ்ந்ததால் அதிக எண்ணிக்கையானோர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்கம்பிகள் மீது மரங்கள் வீழ்ந்ததால் சுமார் 80 லட்சம் பேர் மின்சாரம் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
அத்துடன் 6,000 ஹெக்டேயர் (15,000 ஏக்கர்) பரப்பளவிலான பயிர்ச்செய்கைகள் நாசமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் ஆயிரக்கணக்கான மீன்வளர்ப்பு திட்டங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
Kidhours – Cyclone Affected 28 Died
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.