Wednesday, January 22, 2025
Homeஉலக காலநிலைபயங்கர புயல்! 12 பேர் உயிரிழப்பு Cyclone Affected 12 Dead

பயங்கர புயல்! 12 பேர் உயிரிழப்பு Cyclone Affected 12 Dead

- Advertisement -

Cyclone Affected 12 Dead உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

அமெரிக்க மாகாணங்களை பயங்கர புயல் பந்தாடியுள்ளது. இந்த புயலால் 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும், சுமார் 14 லட்சம் மக்கள் இருளில் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

- Advertisement -

R7YGFM

- Advertisement -

கென்டக்கி, அலபாமா, கலிபோர்னியா, மிசிசிப்பி உள்ளிட்ட மாகாணங்களில் மணிக்கு 129 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசியதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றின் மேற்கூரைகள் பல மைல் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டன.

இந்த பயங்கர புயல் அங்கு கடுமையான சூறவாளி, பனிப்பொழிவு மற்றும் கனமழையை கொண்டு வந்தது. குறிப்பாக கலிபோர்னியாவில் பல அடிக்கு பனி கொட்டியது. வீடுகள், கார்கள் உள்ளிட்டவற்றை பனிதுகள்கள் மூழ்கடித்தன.

இடைவிடாது கொட்டிய கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 7 மாகாணங்களில் பல முக்கிய இடங்களில் சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதோடு, விமான சேவையும் முடங்கியுள்ளது.

இதனால் மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே புயல் காரணமாக ஏற்பட்டுள்ள மின்தடையால் 7 மாகாணங்களில் சுமார் 14 லட்சம் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.

புயல் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் டஜன் கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், பலர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த புயல் தற்போது தெற்கில் இருந்து வடகிழக்கு மாகாணங்களை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதைத்தொடர்ந்து டெக்சாஸ் தொடங்கி பென்சில்வேனியா வரை 8 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

 

Kidhours – Cyclone Affected 12 Dead

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.