California Flood உலக காலநிலை செய்திகள்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அடுத்தடுத்து உருவான புயல்கள் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் தெற்கு சான் ஃப்ரான்சிஸ்கோ, ஸ்பிரிங்வில்லி, பஜாரோ, சாண்டா குரூஸ் ஆகிய பகுதிகளில் வீடுகள், கட்டடங்கள் உள்ளிட்டவை இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு தண்ணீரில் மூழ்கியுள்ளன.
மேலும், முக்கிய சாலைகள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதால் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. தொடர்ந்து, மின்கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவை சாய்ந்ததால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு பல
இடங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இதையடுத்து, தாழ்வான பகுதிகளில் இருந்தவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.
Kidhours – California Flood
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.