Air Pollution in Sri Lanaka உலக காலநிலை செய்திகள்
நாட்டில் தற்பொழுது நிலவுவது பனிக் குளிர் அல்ல – இலங்கையின் வளிமண்டலம் மாசடைந்துள்ளது –
இலங்கையின் வடக்குப் பகுதியில் காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.
மண்டோஸ் சூறாவளி மூலம் வட இந்திய மாசடைந்த வளி இலங்கையில் சேர்ந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக நீங்கள் பனி பொழிவு என நம்பிவந்த பனி இதுதான்.
இலங்கையில் வளி அபாயகரமாக மாசுபட்டுள்ளது.
தற்போது காணப்படும் மூடுபனி இயற்கையான நிகழ்வல்ல, ஏனெனில் இலங்கையின் வடக்குப் பகுதியில் காற்றின் தரம் மிகவும் மாசடைந்த நிலையை எட்டியுள்ளது.
இந்தியாவிலிருந்து வீசும் அசுத்த காற்று காரணமாக இப்பகுதி காற்று தரக் குறியீட்டில் (AQI) 200க்கு மேல் பதிவு செய்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் தங்கள் உடல் நலத்தை பாதுகாக்க முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
AQI சுட்டெண்படி
யாழ்ப்பாணத்தில் 212 ஆகவும், கம்பஹாவில் 189 ஆகவும், தம்புள்ளையில் 170 ஆகவும், கொழும்பில் 169 ஆகவும், கண்டியில் 161 ஆகவும், நீர்கொழும்பில் 170 ஆகவும், அம்பலாந்தோட்டையில் 157 ஆகவும் காற்றின் மாசுபாடு பதிவாகியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக காற்று மாசுபாட்டை கண்காணிக்கும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது .
உடல் நலத்தை பாதுகாக்க முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.