140 Flights Canceled உலக காலநிலை செய்திகள்
பிரித்தானியாவில் மோசமான வானிலை காரணமாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
“கெத்லீன்” புயலுடன் கூடிய பலத்த காற்று மற்றும் வெப்பமான வானிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதற்கமைய விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பிரித்தானியாவில் சுமார் 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், சிரற்ற வானிலையால் ஸ்கொட்லாந்திலும் ரயில் மற்றும் படகு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காற்றின் நிலை காரணமாக, இங்கிலாந்தின் வடமேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள் மற்றும் வடக்கு அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன
Kidhours – 140 Flights Canceled
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.