Moch Cylone Update உலக காலநிலை செய்திகள்
மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தோன்றிய தாழமுக்கம் புயலாக மாற்றம் பெறுவதற்கான நிலைமைகள் உருவாக தொடங்கியுள்ளன.
இன்று இரவு அல்லது நாளை காலை இது புயலாக மாற்றம் பெறும்
பங்களாதேஷுக்கும் மியன்மாருக்கும் இடையில் இந்த புயல் கரையைக் கடக்கும். ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்த புயலால் இலங்கையின் எந்த ஒரு பகுதிக்கும் நேரடியான பாதிப்பு கிடையாது.
எதிர்வரும் 12.05.2023 வரை வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு அவ்வப்போது மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
அதேவேளை வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ள இந்த புயல் எமது பிரதேசத்தில் காணப்பட்ட ஈரப்பதனை தன்னுடைய வெளி மற்றும் உள்வளையப் பகுதிகளுக்கு ஈர்த்துக் கொண்டிருப்பதன் காரணமாக நாளை(10.05.2023) நண்பகல் முதல் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் வெப்பநிலை அதிகரிக்கும்.

சில பிரதேசங்களில் மிதமான மழை கிடைத்தாலும், வெப்பநிலையும் உயர்வாக இருக்கும். இந்நிலைமை எதிர்வரும் 24.05.2023 வரை காணப்படும்.
இந்துக்களின் பஞ்சாங்க நிலைமையின் படி நாங்கள் தற்போது அக்கினி நட்சத்திர காலத்தினுள் உள்ளோம். இந்த அக்கினி நட்சத்திரம் என்பது 25 நாட்களைக் கொண்டது. இம்முறை இது 04.05.2023 முதல் 29.05.2023 வரையான 25 நாட்களை உள்ளடக்கியுள்ளது.
Kidhours – Moch Cylone Update
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.