Libya Flood Affect உலக காலநிலை செய்திகள்
லிபியா நாட்டில் ஏற்பட்ட மிகபெரும் வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், தற்போது நகர மேயர் உட்பட மொத்த அதிகாரிகளையும் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் டெர்னா நகரை வெள்ளத்தில் மூழ்கடித்த அணைகள் இடிந்து விழுந்ததில் தவறான நிர்வாகம் மற்றும் அலட்சியம் குறித்த சந்தேகம் தொடர்பில் இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
லிபியாவின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், புயலுக்கு பின்னர் டெர்னா நகரில் அணைகள் இடிந்து விழுந்தது தொடர்பாக 8 உள்ளூர் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.குறித்த வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், இச்சம்பவத்திற்கு பின்னர் பொதுமக்கள் அதிகாரிகள் மீதே பழி சுமத்தினர். இதன்பின்னரே மொத்த அதிகாரிகளையும் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Kidhours – Libya Flood Affect
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.