Flood Warning in France உலக காலநிலை செய்திகள்
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை, வெள்ளம் போன்ற அனர்த்தங்களுக்காக இந்த எச்சரிக்கை 06.09.2024 மாலை 4 மணி முதல், 07.09.2024 காலை வரை விடுக்கப்பட்டுள்ளது. Corrèze, Creuse, Dordogne, Hautes-Pyrénées and Haute-Vienne ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யலாம் எனவும், Landes மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் எனவும், Pyrénées-Atlantiques மாவட்டத்தில் மேற்குறித்த இரண்டு அனர்த்தங்களும் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள குறித்த இடங்களில் 80 மி.மீ தொடக்கம் அதிகபட்சமாக 120 மி.மீ வரையும் மழை பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அனர்த்தங்கள் காரணமாக ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் தொடர்ந்தும் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது .
Kidhours – Flood Warning in France
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.