Wednesday, September 18, 2024
Homeஉலக காலநிலைவருகிறது எல் நினோவின் பாதிப்பு El Nino Affects In Indian Ocean

வருகிறது எல் நினோவின் பாதிப்பு El Nino Affects In Indian Ocean

- Advertisement -

El Nino Affects In Indian Ocean  உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

எதிர்வரும் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடலில் மிகக் கடுமையான எல்-நினோ (சூப்பர் எல்-நினோ ) பருவமாற்றம் நிகழு வாய்ப்பிருந்தாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஒருவேளை, இந்த கணிப்பு உண்மையாகும் பட்சத்தில் மாபெரும் தாக்கத்தை இந்த உலகம் சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

எல்- நினோ என்றால் என்ன?

தென் அமெரிக்கக் கண்டத்தின் மேற்குக் கடற்கரையில் ஹம்போல்ட் நீரோட்டம் அல்லது பெரு நீரோட்டம் என்ற கடல் நீரோட்டம் உள்ளது. வழக்கமான காலங்களில், இந்நீரோட்டம் பெரு நாட்டின் கிழக்கு பசிபிக்கில் (Eastern Pacific Ocean) உள்ள “லிமா” கடற்கரையில் இருந்து மேற்கத்திய பசிபிக் பெருங்கடல் வரை ( Western Pacific Ocean) கிழக்கு – மேற்காகச் செல்லுகிறது. இதன் காரணமாக, தென்னமெரிக்கக் கண்டத்தில் இருந்து வெப்பம் ஆசியாவிற்கு கடத்தப்படுகிறது.

- Advertisement -

இதனால், பெரு கடலுக்கடியில் இருந்து குளிர்ச்சியான ஊட்டச்சத்து நிறைந்த நீரை மேலெழுப்பித் தருகிறது. இதனை ஆங்கிலத்தில் அப்வெல்லிங் (coastal upwelling) என்றழைக்கின்றனர். ஊட்டச்சத்து நிரைந்த நீர் மேலெழும்புவதால் அங்கு மீன்கள் வளர்வதற்கான சூழல் உருவாகிறது.

- Advertisement -

சுருங்க சொன்னால், வறண்ட குளிரும், குறைந்த மழையும் கொண்ட கிழக்கத்திய பகுதி, எல்-நினோ தாக்கத்தின் பிறகு மிகவும் ஈரமாக மித வெப்பம் மற்றும் அதிக மழையை உடைய பகுதியாக மாற்றப்படுகிறது.

El Nino Affects In Indian Ocean  உலக காலநிலை செய்திகள்
El Nino Affects In Indian Ocean  உலக காலநிலை செய்திகள்

ஆனால், எல்-நினோ தாக்கத்தின் போது காற்றின் கிழக்கு மேற்கு என்ற இந்த திசை மாறி ( western pacific to Eastern Pacific Ocean) அதற்கு நேர்மாறான மேற்கு கிழக்கு திசைக்கு இடம்பெயர்கிறது. இதனால் வெப்பமான நீர் பெருநாட்டுக் கடற்கரையை வந்தடைகிறது. இதன் காரணமாக, அதிக ஈரப்பதத்தையும், மிதவெப்பத்தையும் அதிகமழையையும் கொண்டிருக்கும் மேற்கத்திய பசிபிக் ஈரப்பதம் இல்லாமலும் மாறுகிறது.

இந்த வெப்பமான நீர் மீன்கள் வளர்ச்சிக்கு ஏதுவானதாக இருக்காது. மேலும், கடல்நீரின் வெப்பம் அதிகரித்து புயலுக்கு வழிவகுக்கிறது. இதனால் மீன்பிடி தொழில் வெகுவாக பாதிப்படைந்து அந்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே பாதிக்கிறது. இதன் தாக்கம், தென்கிழக்கு ஆசியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா பகுதிகளுக்கும் வருகிறது.

 

Kidhours – El Nino Affects In Indian Ocean

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.