Cyclone Warnings to France and UK உலக காலநிலை செய்திகள்
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவை பாரிய புயல் ஒன்று தாக்கவுள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், சியாரன் புயல் (Storm Ciarán) என்ற புயல், வரும் புதன்கிழமை ஆரம்பிக்கும் என்று வியாழன் வரை நீடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.
புயலின் போது மணிக்கு 100 மைல் வேகத்தில் காற்று வீசலாம் என்றும் பிரான்சின் மேற்குக்கரையில் மணிக்கு 80 மைலுக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசலாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.மேலும், குறித்த புயலினால் அப்பகுதிகளின் இந்த வாரம் முழுவதுமே காற்று வீசியவண்ணமே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கனமழையும் பெய்யக்கூடும் என்றும், மேற்கு பிரான்ஸ் பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் பிரான்சின் மீதமுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனால் புயலினால் ஏற்படவிருக்கும் பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Kidhours – Cyclone Warnings to France and UK , Cyclone Warnings to France and UK update
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.