Cyclone in Bay of Bengal உலக காலநிலை செய்திகள்
மத்திய மேற்கு வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்காத போதும் தமிழ்நாடு முழுக்க பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
ஓரிரு நாள்களில் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் இயல்பை விட இந்த ஆண்டு மழை அளவு அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
![வங்கக்கடலில் உருவாகும் புயல் Formation of Cyclone in Bay of Bengal 1 Cyclone in Bay of Bengal](https://www.kidhours.com/wp-content/uploads/2022/10/Untitled-design-93.jpg)
இந்த சூழலில் மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமணடல் மேலடுக்கு சுழற்சி கடந்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி பின்னர் புயலாக உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 22 ஆம் தேதி க்கு பிறகு இந்த புயல் வங்க கடலில் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உருவாகும் இந்த புயலுக்கு சிட்ரங் என பெயரிடப்படும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “ அக்டோபர் 19ஆம் தேதி (இன்று) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இலங்கையில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
Kidhours – Cyclone in Bay of Bengal
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.