Friday, November 29, 2024
Homeஉலக காலநிலைகாலநிலை மாற்றத்தால் 65% பூச்சி இனங்கள் அழியும் Climate Change Affects

காலநிலை மாற்றத்தால் 65% பூச்சி இனங்கள் அழியும் Climate Change Affects

- Advertisement -

Climate Change Affects உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

காலநிலை மாற்றத்தால் மனிதர்கள் சந்திக்கும் ஆபத்துகளோடு இந்த கிரகத்தில் 65 சதவீத பூச்சிகள் அடுத்த நூற்றாண்டில் அழிந்து போகும் ஆபத்து உள்ளது என்று ஒரு புதிய ஆய்வு, கண்டறிந்துள்ளது.

நேச்சர் க்ளைமேட் சேஞ்ச் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் விவரங்களின் படி, வெப்ப அழுத்தத்தில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் விலங்குகளின் எண்ணிக்கையை சீர்குலைக்கும் மற்றும் அவற்றின் அழிவு அபாயத்தை ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

அதோடு காலநிலை மாற்றத்தின் விளைவுகள் முன்னர் கணித்ததை விட மிகவும் விரிவானதாகவும் ஆபத்து நிறைந்ததாகவும் இருக்கலாம் என்று கூறுகிறது.

- Advertisement -

ஒவ்வொரு உயிரினத்திற்கும் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு பங்கு உள்ளது. அதுபோல் பூச்சிகளுக்கும் உள்ளது. அவற்றால் தான் மலைகளில் மகரந்தச் சேர்க்கை நடந்து பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்களின் உற்பத்தி நிகழ்கின்றன.

 

Climate Change Affects உலக காலநிலை செய்திகள்
Climate Change Affects உலக காலநிலை செய்திகள்

 

சில பூச்சிகள் பயிர்களை தாக்கும் பூச்சிகளை உண்டு வாழும். பூச்சிகள் இல்லாவிட்டால் விவசாயம் கிடையாது. மரம், செடி, கொடி என்று எதற்கும் அடுத்த தலைமுறையே இல்ல்லாமல் ஆகிவிடும்.

இயற்கை பாதுகாப்பு அமைப்பின் கூற்றுப்படி, பூச்சிகள் துப்புரவு நிபுணர்களாக செயல்படுகின்றன. கரிமப் பொருட்களை சிதைத்து கழிவுகளை சுத்தம் செய்கின்றன. இதனால் உலகம் குப்பை மலைகளாக மாறாமல் இருக்கிறது.

பூச்சி எண்ணிக்கை இழப்பு கிரகத்தில் இயற்கையின் சமநிலையை மாற்றும். காடுகள் பாலைவனமாகும், உயிர்கள் வாழ தகுதியற்ற கிரகமாக பூமி மாறி விடும்.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் கொண்ட பூச்சிகள் சுற்றுப்புறத் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மாறுபடும் இரத்த வெப்பநிலை உடையது. ஆயினும் வேகமாக மாறும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பத்தை பூச்சிகளால் தகவமைத்துக் கொள்ள முடிவதில்லை. இதனால் வெப்பம் தாங்க முடியாமல் அழிந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெப்பநிலை மாற்றங்களுக்கு பூச்சிகள் எவ்வாறு பதிலளிக்கும் என்பதை ஆராய ஒரு குழு மேம்பட்ட மாதிரிகளைப் பயன்படுத்தியது. அவர்கள் ஆய்வு செய்த 38 பூச்சி இனங்களில் 65 சதவீதம் (25 இனங்கள்) அடுத்த 50 முதல் 100 ஆண்டுகளில் அழிந்துபோகும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர்களின் பகுப்பாய்வு காட்டுகிறது.

காலநிலை மாற்றம் உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் பூமியில் உள்ள உயிர்களின் மரபணுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஏற்படும் மாறுபாட்டின் அளவை எதிர்மறையாக பாதிக்கும் என்பதை விஞ்ஞானிகள் நீண்ட காலமாக கணித்துள்ளனர்.

மனித ஆரோக்கியம், உணவுப் பாதுகாப்பு, சுத்தமான காற்று மற்றும் நீர் மற்றும் உலகளவில் மில்லியன் கணக்கான விவசாய வேலைகளுக்கு உயிரியல் பன்முகத்தன்மையை பராமரிப்பது அவசியம் என்று அவர்கள் கூறினர்.

ஆனால் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இந்த பூச்சிகளின் அழிவு மனிதன் கணிப்பதை விட பெரிதான அழிவுக்கான அபாயத்தை ஏற்படுத்தும். அதை தடுக்கும் நடவடிக்கைகளை இப்போது இருப்பதை விட பன்மடங்கு வேகப்படுத்த வேண்டும் என்று உயிரியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Kidhours – Climate Change Affects , Climate Change Affects in tamil

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.