Tamil Children’s Searching News தேடல்
பலவண்ண மற்றும் வடிவ அமைப்புள்ள பாதணிகளை உருவாக்கி வரும் நேரத்தில் தற்போது வித்தியாசமான முறையில் பாதணிகள் போல் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.
அந்தவகையில்
‘ஹை-ஹீல்ஸ்’ எனப்படும் குதிகாலின் உயரத்தை மேம்படுத்திக்காட்டும் காலணிகளை அணிய பெண்கள் பலரும் விரும்புவார்கள். அதிலும் உயரம் குறைவாக இருப்பவர்களின் விருப்பத்தேர்வாக அந்த காலணிதான் அமைந்திருக்கும்.
அந்த காலணி வடிவிலேயே பிரமாண்ட மான கட்டிடத்தை எழுப்பி இருக்கிறார்கள்.
தைவானின் சியாயி கவுண்டியில் உள்ள புடாய் நகரத்தில் இது அமைந்திருக்கிறது. 2016-ம் ஆண்டு ஜனவரி 10-ந் தேதி கட்டுமானம் நிறைவடைந்து, 2016-ம் ஆண்டு ஜூலை 23-ந் தேதி கட்டிடம் திறக்கப்பட்டது. மிகப் பெரிய உயர் ஹீல்ஸ் ஷூ வடிவ அமைப்பிற் காக இது கின்னஸ் உலக சாதனையும் படைத்திருக்கிறது. இந்த கட்டிடம் 17.76 மீட்டர் உயரம், 11.91 மீட்டர் அகலம், 25.16 மீட்டர் நீளம் கொண்டது.300-க்கும் மேற்பட்ட நீல நிற கண்ணாடி துண்டுகளால் கண்ணை கவரும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டது.
பேச்சுவழக்கில் இதனை ‘ஹை-ஹீல் வெட்டிங் சர்ச்’ என்று குறிப்பிடுகிறார்கள். இது திருமண மண்டப மாக பயன்படுத்தப்படுகிறது.
Kidhours – Tamil Children’s Searching News
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.