Tamil Children News World சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகமே தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி வரும் நிலையில், வுஹானைச் சேர்ந்த சீன விஞ்ஞானிகள் குழு NeoCov என்ற புதிய வைரஸ் திரிபு பரவுவதாகவும், இது அதிக தொற்று விகிதத்துடன் மிகவும் ஆபத்தானது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் மற்றும் பல ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கையின்படி,NeoCov மாறுபாடு தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது சுவாச நோய் அறிகுறியான MERS-COV உடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
எனினும், NeoCov புதிய வைரஸ் இல்லை, ஏனெனில் இது மத்திய கிழக்கு நாடுகளில் 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டது என ஆய்வுகள் தெரிவிகின்றன.
இந்த வைரஸ் வெளவால்களில் கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறித்த வைரஸ் பாதித்த மூவரில் ஒருவருக்கு இறப்பு ஏற்படும் என வுஹான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
kidhours – Tamil Children News World
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.