Tuesday, March 4, 2025
Homeசிறுவர் செய்திகள்நிலத்தடியில் 20,000 மக்கள் ரகசிய நகரம் Underground Village

நிலத்தடியில் 20,000 மக்கள் ரகசிய நகரம் Underground Village

- Advertisement -

Underground Village  பொது அறிவு  செய்திகள்

- Advertisement -

துருக்கியில் அமைந்துள்ள கப்படோசியாவின் காதல் பள்ளத்தாக்கு வழியாக நான் நடந்தபோது வேகமாக வீசிய காற்றால் புழுதி பறந்தது.

Underground Village  பொது அறிவு  செய்திகள்
Underground Village  பொது அறிவு  செய்திகள்

இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற மலைச்சரிவுகள் அந்த நிலப்பரப்பை ஆழமான சிவப்பு பள்ளத்தாக்குகளுடன் வண்ணமயமாக்கின.

- Advertisement -

மேலும், தூரத்தில் புகைக்கூடு போன்ற பாறை வடிவங்கள் தெரிந்தன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கொந்தளிப்பான எரிமலைச் சூழல் இயற்கையாகவே இந்தக் கோபுரங்களை உருவாக்கியுள்ளது.

- Advertisement -

மத்திய துருக்கியில் அமைந்துள்ள இந்த இடத்திற்கு சுற்றுப்பயணமும் அதனூடே வெப்பக்காற்று பலூன் சவாரியில் ஈடுபடவும் மில்லியன் கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.

ஆனால், கப்படோசியாவின் இடிந்து விழும் மேற்பரப்பிற்கு கீழே, 20,000 மக்களின் வாழ்விட ரகசியத்தை மறைத்து வைத்திருக்கும் ஒரு நிலத்தடி நகரம் பல நூற்றாண்டுகளாக மறைந்திருந்தது.

இன்று டெரிங்குயு என அழைக்கப்படும் பழங்கால நகரமான எலெங்குபு, பூமியின் மேற்பரப்பிலிருந்து 85 மீட்டருக்கு மேலான ஆழத்தில் 18 நிலைகளில் குகைப்பாதைகளை சூழ்ந்திருந்தது.

உலகிலேயே மிகப்பெரிய அளவில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட இந்த நிலத்தடி நகரம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
கிரேக்க-துருக்கியப் போரின்போது அடைந்த தோல்வியை அடுத்து, 1920களில் இந்த நகரம் கப்படோசியன் கிரேக்கர்களால் கைவிடப்பட்டது.

அதன் குகை போன்ற அறைகள் நூற்றுக்கணக்கான மைல்கள் நீளத்தில் அமைந்திருப்பது மட்டுமல்லாமல், இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் தனித்தனி நிலத்தடி நகரங்களும் இந்தக் குகைப் பாதைகளுடன் இணைக்கப்பட்டு, பூமிக்கடியில் பெரிய வலையமைப்பை உருவாக்கிருக்கலாம் என தோன்றுகிறது.

எனது பயண வழிகாட்டியான சுலேமானின் கூற்றுப்படி, டெரிங்குயு 1963 ஆம் ஆண்டில் உள்ளூர்வாசி ஒருவரால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தன்னுடைய வீட்டை புதுப்பித்தபோது, அவருடைய கோழிகள் தொடர்ந்து காணாமல் போயின.

புதுப்பிக்க தோண்டப்பட்ட குழிக்குள் நுழையும் கோழிகள், பின்னர் காணாமல் போய்விடும். இது தொடர்ந்து நடைபெறவே, அந்த இடத்தை அவர் தோண்டியபோது ஓர் இருளடைந்த பாதையைக் கண்டுபிடித்தார்.

Underground Village  பொது அறிவு  செய்திகள்
Underground Village  பொது அறிவு  செய்திகள்

டெரிங்குயுவின் இந்த நிலத்தடி நகரத்திற்கு செல்லும் 600 நுழைவுவாயில்கள் தனியார் வீடுகளுக்குள் இருப்பதை கண்டுபிடிப்பதற்கு வழிகோலிய, முதல் முயற்சி இதுதான்.
உடனடியாக தொடங்கிய அகழ்வாராய்ச்சியில்,

நிலத்தடி குடியிருப்பு, உலர் உணவு சேமிப்பு, கால்நடை தொழுவங்கள், பள்ளிகள், வைன் ஆலைகள் மற்றும் ஒரு தேவாலயம் ஆகியவற்றின் சிக்கலான வலையமைப்பு வெளிப்பட்டது.

ஒரு முழு நாகரிகமும் பாதுகாப்பாக நிலத்தடியில் அங்கு புதைந்திருந்தது. அதன் பிறகு, ஆயிரக்கணக்கான துருக்கிய சுற்றுலாப்பயணிகள் அந்த இடத்திற்கு வருகை தர ஆரம்பித்தனர். பின், 1985ஆம் ஆண்டு யுனஸ்கோவின் பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் டெரிங்குயு இணைக்கப்பட்டது.

இந்த நகரம் எப்போது உருவானது என்பது பற்றி உறுதியான தகவல்கள் இல்லை. ஆனால், கி.பி. 370இல் எழுதப்பட்ட செனோபோனின் அனபாசிஸ் புத்தகத்தில் டெரிங்குயு பற்றிய குறிப்புகள் உள்ளன.

அந்தப் புத்தகத்தில், கப்படோசியா பகுதியில் அல்லது அதற்கு அருகில் இருந்த அனடோலியன் மக்கள், அப்பகுதியில் நன்கு அறியப்பட்ட குன்று ஓர குகைக் குடியிருப்புகளைவிட, நிலத்தடியில் தோண்டப்பட்ட வீடுகளில் வசித்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மண்ணில் நீர் பற்றாக்குறை காரணமாக தனிசிறப்பான நிலத்தடி கட்டுமானம், இளகிய மற்றும் எளிதில் வடிவமைக்கும் தன்மை கொண்ட பாறைகள் இந்தப் பகுதியில் அமைந்திருப்பதால் கப்படோசியா

இந்த வகையான நிலத்தடி கட்டுமானத்திற்கு மிகவும் பொருத்தமானது என்கிறார் புளோரிடா ஸ்டேட் பல்கலைக்கழக பழங்கால ஆய்வுகளின் இணைப் பேராசிரியரான ஆண்ட்ரியா டி ஜியோர்ஜி.

இந்தப்பகுதியின் நில அமைப்பு, தோண்டுவதற்கு உகந்தது என்றும் மண்வெட்டி மற்றும் பிகாக்ஸ் உதவியுடனே இந்தப் பாறைகளைத் தோண்ட முடியும் என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால், டெரிங்குயுவின் நிலத்தடி நகரத்தை யார் உருவாக்கினார்கள் என்பது மர்மமாகவே உள்ளது. நிலத்தடி குகைகளின் பரந்த வலையமைப்பிற்கான அடித்தளத்தை ஹிட்டியர்களது வரலாற்றில் பார்க்க முடிகிறது,

“கிமு 1200இல் ஃபிரிஜியர்களின் தாக்குதலுக்கு ஆளானபோது அவர்கள் பாறையில் முதல் சில நிலைகளை தோண்டியிருக்கலாம்” என்கிறார் மத்தியதரைக் கடல் நிபுணர் ஏ பெர்டினி.

குகை குடியிருப்புகள், பிராந்திய குகை கட்டடக்கலை பற்றிய அவரது கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கும் இந்தக் கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில், ஹிட்டியர்களின் கலைப்பொருட்கள் டெரிங்குயுவின் உள்ளே காணப்பட்டன.

இருப்பினும், நகரத்தின் பெரும்பகுதி ஃபிரிஜியன்களால் கட்டப்பட்டிருக்கலாம். “பிரிஜியர்கள் அனடோலியாவின் மிக முக்கியமான ஆரம்பகால பேரரசுகளில் ஒன்று” என்கிறார் டி ஜியோர்ஜி.

பிரிஜியர்கள் கி.மு.வின் ஆயிரம் ஆண்டுகால இறுதியில் மேற்கு அனடோலியா முழுவதும் பரவியிருந்தனர்.

பாறை அமைப்புகளை நினைவுச் சின்னமாக்குதல் மற்றும் பாறை வெட்டு முகப்புகளை உருவாக்குவதற்கான திறமை அவர்களிடம் இருந்தது என்றும் டி ஜியோர்ஜி கூறுகிறார்.

ஆனால், டெரிங்குயுவின் நிலத்தடி நகரத்தை யார் உருவாக்கினார்கள் என்பது மர்மமாகவே உள்ளது. நிலத்தடி குகைகளின் பரந்த வலையமைப்பிற்கான அடித்தளத்தை ஹிட்டியர்களது வரலாற்றில் பார்க்க முடிகிறது,

“கிமு 1200இல் ஃபிரிஜியர்களின் தாக்குதலுக்கு ஆளானபோது அவர்கள் பாறையில் முதல் சில நிலைகளை தோண்டியிருக்கலாம்” என்கிறார் மத்தியதரைக் கடல் நிபுணர் ஏ பெர்டினி.

குகை குடியிருப்புகள், பிராந்திய குகை கட்டடக்கலை பற்றிய அவரது கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கும் இந்தக் கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில், ஹிட்டியர்களின் கலைப்பொருட்கள் டெரிங்குயுவின் உள்ளே காணப்பட்டன.

இருப்பினும், நகரத்தின் பெரும்பகுதி ஃபிரிஜியன்களால் கட்டப்பட்டிருக்கலாம். “பிரிஜியர்கள் அனடோலியாவின் மிக முக்கியமான ஆரம்பகால பேரரசுகளில் ஒன்று” என்கிறார் டி ஜியோர்ஜி.

பிரிஜியர்கள் கி.மு.வின் ஆயிரம் ஆண்டுகால இறுதியில் மேற்கு அனடோலியா முழுவதும் பரவியிருந்தனர். பாறை அமைப்புகளை நினைவுச் சின்னமாக்குதல் மற்றும் பாறை வெட்டு முகப்புகளை உருவாக்குவதற்கான திறமை அவர்களிடம் இருந்தது என்றும் டி ஜியோர்ஜி கூறுகிறார்.

 

Kidhours – Underground Village , Underground Village With 20000 People , Underground Village oldest one

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு  செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.