Tamil children News Solar Paint சிறுவர்களுக்கான உலக செய்திகள்
நானோ டெக்னாலஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு வரும் சோலார் பெயிண்ட்கள் குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
![இனி மின்சாரத்தை எளிதாக சேமிக்கலாம் Tamil children News Solar Paint # World Best Tamil 1 Tamil children News Solar Paint சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2022/09/Untitled-design-2022-09-22T071454.459.jpg)
இதனிடையே மக்கள் தங்களது சொந்த தேவைக்கான மின்சாரத்தை தயாரிப்பதற்காக வீட்டின் கூரைகள் மற்றும் சுவர்களில் சோலார் பெயிண்ட்டை பூசி வருகின்றனர்.
தற்போது ஆஸ்திரேலியாவின் ராயல் மெல்போர்ன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஆர்எம்ஐடி) விஞ்ஞானிகள் மின்சாரம் தயாரிக்கக்கூடிய சோலார் பெயிண்ட்டை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பெயிண்டானது சூரியனின் கதிர்கள் தாக்கும் போது சுற்றியுள்ள ஒளி மற்றும் ஈரப்பதத்தை மின்சக்தியாக மாற்றுகிறது.
அதன் பின்னர் பெயிண்டில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஆற்றலானது, அறையில் உள்ள சாதனங்களுக்கு மின்சக்தி வழங்க பயன்படுகிறது.
ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த அற்புதமான பெயிண்ட் இன்னும் சந்தைகளில் விற்பனைக்கு கொண்டுவரப்படவில்லை என்றாலும்,
அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் மலிவான விலையில் விற்கப்பட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பெயிண்ட்டை அலுவலகம், வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள், கார் கூரைகள், சாலைகள் என எங்கு வேண்டுமானாலும் பூசக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
kidhours – Tamil children News Solar Paint
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.