Tamil Children News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பால் வீதி மண்டலத்தில் விசித்திரமான சுழலும் பொருள் ஒன்றை கண்டுபிடித்திருக்கும் அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் அது வானியலாளர்கள் இதுவரை கண்டிராத ஒன்று என குறிப்பிட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தனது பட்டப்படிப்பு ஆய்வுக் கட்டுரைக்காக பணியாற்றியபோதே இந்தப் பொருளை முதலில் அவதானித்துள்ளார்.
இந்த விசித்திரமான சுழலும் பொருள் ஒவ்வொரு மணித்தியாலயத்திலும் மூன்று தடவைகள் ரோடியோ ஆற்றலின் மிகப்பெரிய வெடிப்பை வெளிப்படுத்தி வருகிறது.அதேசமயம் ஒவ்வொரு 18.18 நிமிடங்களிலும் மணிப்பொறி போன்று துடிப்பு வெளிப்படுகிறது என்று இந்த கண்டுபிடிப்பு தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளும் வானியல் விஞ்ஞானி நடாஷா ஹேர்லி வோக்கர் (Natasha Hurley Walker) குறிப்பிட்டுள்ளார்.
பூமியில் இருந்து சுமார் 4,000 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் இந்தப் பொருள் நம்பமுடியாத அளவு பிரகாசத்தையும் மிகவும் வலுவான காந்தப்புலத்தையும் கொண்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.