Tamil Children News
உலக அளவில் இராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
உலக நாடுகளின் ராணுவ செலவு குறித்த ஆய்வு அறிக்கையை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2021-ஆம் ஆண்டில் உலக நாடுகளின் இராணுவச் செலவு இதுவரை இல்லாத அளவில் 2.1 டிரில்லியன் டாலர்களை எட்டியது.
2021ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக அளவில் ராணுவத்திற்கு செலவு செய்யும் முதல் 5 நாடுகளாக அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரித்தானிய மற்றும் ரஷ்யா ஆகியவை உள்ளன.
இந்த 5 நாடுகளின் இராணுவ செலவு, உலக நாடுகளின் மொத்த ராணுவ செலவில் 62 சதவீதமாக உள்ளது.
மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா, 2021ல் ராணுவத்திற்காக 76.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்துள்ளது.
முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா 801 பில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளது.
சீனா 293 பில்லியன் டாலர்கள், பிரிட்டன் 68.4 பில்லியன் டாலர்கள், ரஷ்யா 65.9 பில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளன.
கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியிலும், உலக ராணுவச் செலவுகள் சாதனை அளவை எட்டியிருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் டியாகோ லோப்ஸ் டா சில்வா கூறியுள்ளார்.
பணவீக்கம் காரணமாக வளர்ச்சி விகிதத்தில் ஒரு மந்தநிலை இருந்தபோதிலும், ராணுவச் செலவு 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.