Tamil Children News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
காட்டுத் தீ ஏற்படும் பகுதிகளில் வசிப்போருக்கு நேரடியாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களைப் போன்றே மறைமுகமான ஆபத்துக்களும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காட்டுத் தீ ஏற்படும் பகுதிகளிலிருந்து 50 கிலோ மீற்றர் பரப்பிற்குள் பத்து ஆண்டுகள் வரையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு புற்று நோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மொன்றியலின் மெக்கில் பல்கலைக்கழகத்தினால் முன்ன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
நுரையீரல் புற்று நோய் மூளைக்கட்டி புற்று நோய் போன்ற நோய்கள் அதிகளவில் ஏற்படக்கூடிய அபாயங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு மில்லியன் கனேடியர்களிடமிருந்து இருபது ஆண்டுகளாக நடாத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
காட்டுத் தீப் பரவுகையின் போது வெளியாகும் நச்சுப் பதார்த்தங்களினால் இவ்வாறு மனிதர்களுக்கு புற்று நோய் ஏற்படும் ஆபத்து அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
kidhours – Tamil Children News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.