Tamil Children News Cuba சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இயன் சூறாவளி தாக்கியதை அடுத்து கியூபா முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றை மீண்டும் இயக்கத்தில் கொண்டு வர முடியாமல் போயுள்ளதாகவும்,
மின் அமைப்பு மொத்தமாக சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனிடையே, நாடு முழுவதும் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது வகை என அடையாளப்படுத்தப்பட்டுள்ள
இயன் சூறாவளியானது மணிக்கு 195கிமீ வேகத்தில் வீசியதுடன், தற்போது புளோரிடாவை புரட்டியெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின் அமைப்புகள் மொத்தமாக சேதமடைந்துள்ளதால், நாடு முழுவதும் 11 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாடே இருளில் மூழ்கியுள்ளதாகவும் ஆரசாங்கம் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இயன் சூறாவளி காரணமாக கியூபாவின் சில பகுதிகளில் 30cm மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், புளோரிடாவின் மேற்கு கடற்கரையில் புதன்கிழமை இயன் புயல் கரையைக்கடக்கும் என தெரிவித்துள்ளனர்.
இயன் புயல் புளோரிடாவின் மேற்கு கடற்கரையைக் கடக்கும் நேரத்தில் நான்காவது வகை சூறாவளியாக மாறலாம் எனவும், காற்றின் வேகம் மணிக்கு 130மைல் என இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளோரிடாவில் சுமார் 2.5 மில்லியன் மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வார இறுதியில் புளோரிடா முழுவதும் அவசரகால நிலையை ஆளுநர் ரான் டிசாண்டிஸ் அறிவித்துள்ளதுடன் 5,000 தேசிய காவலர் துருப்புக்களை களமிறக்கியுள்ளார்.
இதனிடையே, வெள்ளை மாளிகை நிர்வாகிகள் தரப்பு அவசர கால பிரகடனம் செய்துள்ளது,
இது பெடரல் மற்றும் மாகாணா அதிகாரிகளுக்கு பேரிடர் நிவாரணம் மற்றும் உதவிகளை ஒருங்கிணைக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kidhours – Tamil Children News Cuba
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.