Tamil Children News China சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கொரோனா ஊரடங்கு காரணமாக சீனாவின் ஷாங்காய் நகரம் உணவு பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 25 மில்லியன் மக்களில் பெரும்பாலானோர் மாமிசம், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கடுமையாக போராடி வருவதாக தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, இணையமூடாக மளிகைக் கடைகளை தொடர்பு கொண்டாலும் பெரும்பாலும் ஏமாற்றமே மிஞ்சுவதாக குறிப்பிடுகின்றனர். சிலர் அரசு விநியோகம் மேற்கொண்ட இறைச்சி மற்றும் காய்கறி உள்ளிட்ட உணவுப் பொட்டலங்களை சில நாட்களுக்கு பெற்றனர்.
ஆனால் வெளியே எப்போது அவர்களை அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லாததால், பதட்டம் அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது.
8 பேர் கொண்ட ஒரு குடும்பம் மூன்று வேளையும் சாப்பிட்டு வந்த நிலையில், தற்போது மதியம் மட்டும் சாப்பிடுவதாகவும், அதுவும் நூடுல்ஸ் மட்டுமே சமைப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஷாங்காய் மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருவது சீன அரசாங்கத்தை கோபமடைய செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வியாழக்கிழமை வெளியான தகவலில், நாடு முழுவதும் 23,107 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 1,323 தவிர மற்ற அனைத்தும் அறிகுறிகள் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் 19,989 பேர் ஷாங்காய் பகுதி மக்கள் என்றே தெரிய வந்துள்ளது. இதில் 329 பேருக்கு மட்டுமே அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஷாங்காய் நகரம் மார்ச் 28 முதல் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கொரோனா சோதனைக்காக மட்டுமே வெளியே செல்ல முடியும். மக்களுக்கு தேவையான அளவு உணவு விநியோகத்திற்கு நகர நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தும், ஆட்கள் மற்றும் வாகன பற்றாக்குறையால் நகர நிர்வாகத்தின் திட்டம் முடங்கியுள்ளதாக கூறுகின்றனர்.
kidhours – Tamil Children News China
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.