Tamil Children News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகில் ஆக பழமையான வரலாற்றுக்கு முந்தைய ஒரு மீனின் இதயம் மேற்கு ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இதயம் 380 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
“வரலாற்று ஆய்வுகள்“.இது வெறும் வார்த்தைகள் அல்ல. மனிதர்கள், விலங்குகள் மற்றும் அவற்றின் நாகரிகங்கள் என அனைத்தையுமே உலகிற்கு சாட்சிகளோடு பறைசாற்றும் அற்புதமான நிகழ்வு.
நீண்ட காலமாக மேற்கொண்ட ஆய்வுகள் பொது வெளிக்கு வரும் போது தான், இத்தனை விஷயங்களை நம் முன்னோர்கள் கடைப்பிடித்தார்களா? என நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
குறிப்பாக மனிதர்களின் நாகரிகம், வாழ்க்கை முறை, வியந்து பார்க்க வைக்கும் கட்டிட கலை என வரலாற்று ஆய்வுகளின் சான்றுகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்..
அதிலும் மனிதர்களுடன் டைனோசர் போன்ற ராட்சத மிருகங்களும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்துள்ளன என்பதை ஆய்வுகள் மற்றும் தொல்லியல் எச்சங்கள் தான் நமக்கு வெளிப்படுத்தியது.
இந்த வரிசையில் ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற கர்டின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தொல் பொருள்களை ஆய்வு நடத்தி வந்தனர்.
அப்போது மேற்கு ஆஸ்திரேலியாவில் ஒரு மீனின் தொல்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தது. இதன் முடிவில் தெரியவந்த உண்மை தான் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மீனில் நடத்தப்பட்ட ஆய்வின் போது கண்டுப்பிடிக்கப்பட்ட இதயம் சுமார் 300 மில்லியன் ஆண்டுகள் ஆகப் பழமையான எனக் கண்டறிப்பட்டது.
இதுவரை தங்கள் ஆராய்ச்சி பணியில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய கண்டுபிடிப்பு இது தான் என்கின்றனர் ஆஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
இதுப்போன்று ஆராய்ச்சியாளர்களே வியந்து சொல்லும் அளவிற்கு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மீனின் இதயத்தில் என்ன அம்சங்கள் உள்ளது என இங்கே நாமும் தெரிந்துக் கொள்வோம்.
‘கோ கோ’ என்று அழைக்கப்படும் மீன் வகை இப்போது அழிந்துவிட்டது என்றும், இதோடு இந்த மீன்வகை டைனோசர்கள் தோன்றுவதற்கு முன்னரே சுமார் 60 ஆண்டுகள் பழமையானதாக இருந்துள்ளது.
மேலும் மனிதர்கள் உள்ளிட்ட முதுகு எலும்புள்ள அனைத்து மிருகங்களிலும் இதயம் எவ்வாறு உருமாறியது என்பதை தெரியப்படுத்தக்கூடிய முக்கிய கண்டுப்பிடிப்பாக நம்புகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இதோடு இந்த மீனின் இதயம் மற்ற மீன்களை விட பரிணாம வளர்ச்சி அடைந்திருந்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இந்த மீனின் இதயம் மனிதர்களின் இதயம் போன்றே இருந்துள்ளது.மனிதர்களின் உடல் அமைப்பை விளக்குவதற்கு இந்த கண்டுபிடிப்பு முக்கியமானதாக அமையும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
கர்டின் பல்கலைக்கழக இணை ஆசிரியர் ஜான் லாங், இந்த பழங்கால மீன்களில் மென்மையான உறுப்புகளின் இந்த புதிய கண்டுபிடிப்புகள் உண்மையிலேயே பழங்கால ஆராய்ச்சியாளர்களின் கனவுகளின் பொருளாக இருக்கும் என்றும், இந்த புதைபடிவங்கள் இந்த வயதிற்கு உலகில் சிறந்த முறையில் பாதுகாக்கப்படுகின்றன என்றார்.
kidhours – Tamil Children News , Tamil Children News update
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.