Tamil Children Latest News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கானா நாட்டில் சுரங்க பணிகளுக்காக வெடிபொருட்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தியுடன் உந்துருளி மோதியால் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
கானாவின் மேற்குப் பகுதியில் உள்ள தங்கச்சுரங்கம் ஒன்று தேவையான வெடிபொருட்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தியொன்று பொகாசா நகரில் உள்ள சந்தைப்பகுதி ஒன்றின் ஊடாக பயணித்துக் கொண்டிருந்தபோது, வேகமாக வந்த உந்துருளியொன்று அதனை மோதியுள்ளது.இவ் விபத்தில் பாரஊர்தி தீப்பற்றியதையடுத்து அதிலிருந்த வெடிமருந்துகள் வெடித்துள்ளன. இவ்வெடி விபத்தையடுத்து, அருகில் இருந்த பகுதிகள் அனைத்தும் தரைமட்டமாகியதுடன் 17 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர்.

மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிவிபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டனர்.
படுகாயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.