Tamil Best News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
மக்கள் வசிப்பதற்கு உலகளவில் சிறந்த நகரமாக ஆஸ்திரியா தலைநகர் வியன்னா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
![உலகளவில் மக்கள் வசிப்பதற்கான சிறந்த நகரங்கள் பட்டியல் 2022 # Tamil Best News # World Safer Countries 2022 1 Tamil Best News சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2022/06/Untitled-design-2022-06-24T094221.835.jpg)
பொருளாதார புலனாய்வு பிரிவு நடத்திய சிறப்பு ஆய்வில் மக்கள் வசிப்பதற்கு சிறந்த நகரங்களாக தேர்வு செய்யப்பட்ட முதல் 10 நகரங்களில் ஐரோப்பாவைச் சேர்ந்த 6 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
ஸ்திரத்தன்மை, சிறந்த உள்கட்டமைப்பு, சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்குக்கான அம்சங்களை கொண்டு இந்த நகரங்கள் பட்டியலிடப்படுகின்றன.
![உலகளவில் மக்கள் வசிப்பதற்கான சிறந்த நகரங்கள் பட்டியல் 2022 # Tamil Best News # World Safer Countries 2022 2 Tamil Best News](https://www.kidhours.com/wp-content/uploads/2022/06/Untitled-design-2022-06-24T093915.361-1.jpg)
முதல் 10 இடங்களுக்குள் வழக்கமாக இடம்பிடிக்கும் ஆக்லாந்து கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இந்த பட்டியலில் 34-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.கோப்பன்ஹேகன், ஸூரிக், ஜெனீவா , ஃபிராங்க்ஃபர்ட் , ஆம்ஸ்டர்டாம் ஆகிய ஐரோப்பிய நகரங்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் லண்டன் 33-வது இடத்திலும் ஸ்பெயினின் பார்சிலோனா மற்றும் மாட்ரிட் முறையே 35 மற்றும் 43 வது இடத்தைப் பிடித்துள்ளன.இத்தாலியின் மிலன் 49வது இடத்திலும், அமெரிக்காவின் நியூயார்க் நகரம் 51வது இடத்திலும், சீனாவின் பெய்ஜிங் 71வது இடத்திலும் உள்ளன.
kidhours – Tamil Best News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.