ஜெர்மனியில் வங்கியில் பணம் வைத்துள்ளவர்களை ஏமாற்றும் மோசடி கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் கைவிரல் அடையாளங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என வங்கிகள் அனுப்புவது போன்று மின்னஞ்சல் ஒன்றை போலியான முறையில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதனை உண்மை என நம்புவோர் அதில் வரும் லிங்கினை கிளிக் செய்வதன் மூலம் தமது வங்கி தகவல்களை மோசடிக்கையாளர் வழங்குவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான மின்னஞ்சல்கள் வரும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என வங்கிகள், தமது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுபோன்ற மோசடியாளர்கள் தகவல்களை பெற்று வங்கியில் உள்ள பணத்தை ஒன்லைன் மூலம் மாற்றிக் கொள்வதாக தெரிய வந்துள்ளது.
இவ்வாறான மோசடி சம்பவங்கள் பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் தற்போது தீவிரம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
kidhours – Tamil Best Children News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.