Thursday, September 12, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்பு100 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டி Olympic 2024

100 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டி Olympic 2024

- Advertisement -

Olympic 2024  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

விளையாட்டு உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒலிம்பிக் விளையாட்டு தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டில் தொடங்க உள்ளது.

இந்த சூழலில் பாரீஸ் ஒலிம்பிக் பதக்கத்தில் ஈபிள் டவரின் உலோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

இது குறித்த சுவாரஸ்ய தகவலை பாரீஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் பகிர்ந்து உள்ளனர்.

- Advertisement -

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் எதிர்வரும் பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் முனைப்புடன் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.மொத்தம் 329 விளையாட்டுக்கள் இதில் நடத்தப்பட உள்ளது. சுமார் 10,500 பேர் இதில் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாட்டினை ஏற்பாட்டாளர்கள் ஒருங்கிணைத்து வருகின்றனர். இந்த சூழலில் பதக்கம் குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.

வழக்கமாக ஒலிம்பிக் பதக்கத்தின் உருவாக்கத்தில் புதுமையை கடைபிடிக்க போட்டியை நடத்தும் நாடுகள் முற்படும். கடந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கை நடத்திய ஜப்பான் நாடு, பயன்படுத்தப்பட்ட பழைய மொபைல் போன்களை கொண்டு பதக்கங்களை உருவாக்கியது.அது போல பிரான்ஸ் என்றதும் உலக மக்கள் அனைவருக்கும் சட்டென நினைவில் வரும் டவரின் டவரின் உலோகத்தை தற்போது பதக்கத்தில் பயன்படுத்தி உள்ளது அந்நாடு. பதக்கத்தின் First Look வெளியான நிலையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பாரீஸ் ஒலிம்பிக் பதக்கத்தின் மையப்பகுதியில் ஈபிள் டவரின் உலோகம் ஹெக்சகன் வடிவில் இடம் பெற்றுள்ளது.

பார்க்க நம் நாட்டின் 10 ரூபாய் நாணயம் போல உள்ளது. இது கடந்த காலங்களில் ஈபிள் டவரை புதுப்பிக்கும் பணி மேற்கொண்ட போது எடுத்த உலோகம் என்றும். அது சேமிப்பு கிடங்கில் பத்திரமாக வைக்கப்பட்டு இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதக்கதின் மற்றொரு பக்கத்தில் நவீன ஒலிம்பிக்கின் தொடக்கத்தை குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது.

 

Kidhours – Olympic 2024 in Paris

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.