சுவிற்சர்லாந்தின் அழகே பனியும் குளிரும்தான். இதை காண வருடம்தோறும் ஆயிர கணக்கான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.இந்நிலையில், சுவிற்சர்லாந்தின் hairpin வளைவில், சுற்றுலா பயணிகளுக்காக கட்டப்பட்ட Victorian-era என்ற சுற்றுலாபயணிகள் குறைவால் மூடப்பட்டுள்ளது.500க்கும் மேற்பட்ட பனிப்பாறைகள் தற்போதுவரை மறைந்துள்ள நிலையில், அதை காக்க எதுவும் செய்யாவிட்டால் அடுத்து வரும் நூற்றாண்டிற்குள் மீதமுள்ள 1500 பனிப்பாறைகளும் மறைந்துவிடும் என்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பனிப்பாறைகள் உருகும்போது முதலில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தாலும் பின் வரும் நாட்களின் அதன் அளவு வேகமாக குறைந்துவிடும் என்றும், இது பொருளாதார மாற்றத்தை உண்டாக்கிவிடும் என்றும் அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.Reuters-ல் குறிப்பிட்டுள்ள முதல் புகைப்படம் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் எடுக்கப்பட்டது. இதில், பனிப்பாறைகள் 100மீற்றருக்கும் அதிகமான தடிமனுடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இரண்டாவது புகைப்படம் அப்படியே பனிப்பாறைகள் மொத்தையும் இழந்திருப்பதை காணலாம்.கடந்த ஆண்டில் இருந்த பனிப்பாறைகளில், 2சதவிகிதம் தற்போது சுவிற்சர்லாந்து இழந்துள்ளதாக, glacier monitoring நிறுவன தலைவரான GLAMOS தெரிவித்துள்ளார்.
அளவிடும் பணிகள் தொடங்கியதிலிருந்து இப்படி வேகமாக பனிப்பாறைகள் உருகுவதை நாங்கள் பார்த்ததில்லை என்ற அவர் தெரிவித்துள்ளார்.