Tuesday, December 3, 2024
Homeகல்விசுற்றுச்சூழல் கல்வி மற்றும் யுனெஸ்கோ பரிந்துரைத்துள்ள கொள்கைகள்

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் யுனெஸ்கோ பரிந்துரைத்துள்ள கொள்கைகள்

- Advertisement -

கல்வியின் வழியாக, “சுற்றுச்சூழல் பற்றி, சுற்றுச் சூழலுக்காக வழங்கப்படும் கல்வி சுற்றுச் சூழல் கல்வி’ எனப்படும்.

- Advertisement -

“மனிதன், இயற்கையோடும், மனிதனால் உருவாக்கப்பட்ட சூழலோடும் கொண்டுள்ள தொடர்பையும் மக்கட்தொகை, சுற்றுச் சூழல் சீர்கேடு, வளங்கள் ஒதுக்கீடு, பாதுகாத்தல், தொழில் நுட்பம், போன்றவற்றோடு மனிதன் கொள்ளும் முழுமையான தொடர்பையும் உள்ளடக்கிய கல்வி முறையே’ – சுற்றுச் சூழல் கல்வி என்று 1970-ல் ஐக்கிய நாட்டில் இயற்றப்பட்ட சுற்றுச் சூழல் கல்விச் சட்டம் எடுத்துரைத்துள்ளது.

“நிலம், நீர், காற்று ஆகியவற்றை சீரழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் உறுதிப்பாடும், ஈடுபாடும், முயற்சிகளும் சுற்றுச்சூழல்கல்வி ஆகும் என்று” இங்கிலாந்து சுற்றுச் சூழல் பாதுகாப்புக்குழுவின் முதல் அறிக்கை 1971 கூறியுள்ளது.

- Advertisement -
sutradal
sutradal

“இயற்கையான, மனிதன் பண்பாடு மற்றும் ஆன்மீக வளங்களால் உருவாக்கிய சமூக மற்றும் பருப்பொருள் சார்ந்த சுற்றுச் சூழலைப் பற்றிப் புரிந்துக் கொள்ளுதலையும், விழிப்புணர்வு ஏற்படுத்தலையும் மட்டுமின்றி, இவ்வளங்களை பாதுகாப்பதையும், அறிவு பூர்வமாக சிந்தித்துப் பயன்படுத்துவதையும் உள்ளடக்கியதே” சுற்றுச்சூழல்கல்வி என ஆப்ரிக்கக் கல்வியாளர்களின் மாநாட்டு அறிக்கை (1968) கூறியுள்ளது.

- Advertisement -

சுற்றுச்சூழல் கல்வி – வழிகாட்டும் கொள்கைகள்
இயற்கையான மற்றும் உருவாக்கப்பட்ட, சமூக, பொருளாதார, அரசியல்,பண்பாடு, வரலாறு போன்ற கூறுகளால் அமைக்கப்பட்ட சுற்றுச் சூழலை முழுமையாக, அதன் ஒட்டுமொத்தத் தன்மையையும் ஆழ்ந்து ஆராயச் செய்தல்.
குழந்தை முன் பருவக் கல்வியில் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் தொடரும் கல்வி இது என்பதை உணர்தல்.
அனைவரும் செயல் ஆர்வத்துடனும்,துடிப்புடனும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளைத் தீர்க்கப் பங்கேற்றல்.
உள்ளூர், தேசிய, வட்டார மற்றும் உலகளாவிய நோக்கில் சுற்றுச் சூழல் இடர்பாடுகளை ஆய்வு செய்வதும், கற்போருக்கு அவற்றைப் பற்றிய நுண்ணறிவுத் திறனை வளர்த்தலும்.
உள்ளூர் தேசிய, வட்டார மற்றும் உலகளாவிய அடிப்படையில் இடர்பாடுகளை ஆய்வு செய்து. அதன் அடிப்படையில் விழுமியங்களைக் (Value) குழந்தைகளிடையே வளர்த்தல்.
குழந்தைகள் தாம் வாழும் சமுதாயச் சூழலைப்பற்றிய உணர்வைநுட்ப அறிவை, பிரச்சனை தீர்க்கும் முறையை அறியுமாறு செய்தல்.

யுனெஸ்கோ பரிந்துரைத்துள்ள கொள்கைகள்
பன்னாட்டு உணர்வை வளர்க்க யுனெஸ்கோ பின்வரும் பரிந்துரைகளையும் பின்வரும் கொள்கைகளையும், திட்டங்களையும் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

உலக சமுதாயத்திற்கான கல்வியை மனித இனத்திற்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உலக சமுதாயத்தை, ஐக்கிய நாடுகள் சபையின் (United Nation) ஒப்பந்தம் வலியுறுத்தியுள்ள எழுச்சியின் அடிப்படையில் தோற்றுவித்தல்.
சமயக் கோட்பாடுகள் மற்றும் வாழ்க்கை, அரசியல் ஆகிய அடிப்படையில் நாடுகள் வேறுபட்டு இருப்பினும், உலக அமைப்புக்களில் ஒன்றுபட்டு செயல்படவும், அதில் அக்கறை காட்டவும், கடமைப்பட்டுள்ளன.
பல நாடுகளின் தோற்றத்தால், உலக நாகரீகம் தழைத்தது என்பதால் எல்லா நாடுகளும் பிறரைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதையும் தெளிவாக்குதல்.
கடந்த மற்றும் நிகழ்காலச் சூழல், மரபு, சிறப்புத் தன்மைகள். பிரச்சனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களின் வாழ்க்கைமுறை மாறிவிட்டது என்பதையும், அவற்றை செம்மையாக்குவது பற்றியும் தீர்மானித்தல்.
ஒழுக்கம், வயது முதிர்ச்சி, புரிந்து கொள்ளும் திறன், தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சியின் காரணமாக மனித இனத்திற்கான பொதுவான மரபுகள் அல்லது பிறப்புரிமைகள் தோன்றின. உலக நாடுகள் அரசியல் அக்கறை காரணமாக வேறுபட்டு இருப்பினும், அன்றாடம் மக்கள் ஒருவரை, ஒருவர் சார்ந்திருத்தல் கண்கூடு. அதற்கு உலக அளவில் ஒரு அமைப்பு அவசியம் என்பதை உணர்தல் வேண்டும்.
பன்னாட்டு உணர்வை வளர்ப்தற்கான வழி வகைகள்
போர் செய்யும் எண்ணம் மனிதனின் மனதில் எழுவதால், அமைதிக்கான எண்ணத்தையும் அவன் மனதிலேயே அமைக்க வேண்டும்” என்று யுனெஸ்கோ ஆழகாகக் குறிப்பிட்டுள்ளது.

பன்னாட்டு உணர்வை, அரசியல் நோக்கில், கல்வி வளர்க்க இயலாவிடினும், பன்னாட்டு உணர்வு என்ற உணர்ச்சியை, கல்வி என்ற முகவர் மூலமே வளர்க்க இயலும் என்று பெர்ட்ரன் ரசல் (Bertrand Russe) குறிப்பிட்டுள்ளார். ஆகவே கல்வி, பின்வரும் வழிவகைகளின் அடிப்படையில் பன்னாட்டுணர்வை வளர்க்க முயலவேண்டும்.

கலைத்திட்டம் மற்றும் பாடப்புத்தக மறுசீரமைப்பு
உலக அமைதி மற்றும் புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றைக் கலைத் திட்டம் மற்றும் பாடப்புத்தகம் வலியுறுத்தும் வகையில் உருவாக்கவேண்டும். அதற்கு கீழ்க்கண்ட திறன்களை மாணவர்கள் பெறும் வகையில் கலைத்திட்டம் அமைதல் வேண்டும்.

உலக நாட்டின் பிறரைச் சார்ந்துள்ளனர் என்ற உணர்வு.
பல சமயங்களில் ஒத்த சிந்தனைகள், ஒழுங்குக் கொள்கைகள் பற்றிய அறிவு.
உலகத்தில் பின்பற்றப்படும் பல பண்பாடு மற்றும் கலாச்சாரங்கள் பற்றிய அறிவு.
உலகம், அதன்நாடுகள், மக்கள், வாழ்க்கைக்கான எண்ணங்கள் ஆகியவற்றைப் பற்றிய முழுமையான அறிவு.
அமைதியை ஏற்படுத்த மனித இனம் நிகழ்த்திய போராட்டங்கள் பற்றிய அறிவு.
பள்ளிகளில் போதிக்கப்பட்டும் வரலாறு, புவியியல், அறிவியல், இலக்கியம் போன்ற பாடங்கள் மாணவர்களுக்கு தாங்கள் உறுப்பினராக உள்ள உலகத்தைப் பற்றி விரிவான, பரந்த எண்ணத்தை உருவாக்க வேண்டும்.

 

 

environment environmental pollution, world environment day, environmental protection, environment day, ministry of environment, world environment day 2019 unep, save environment, natural environment, environmental management, deforestation effects plastic pollution, environmental sustainability, environmental science, environmental organizations, environmental issues, save earth, environmental impact assessment, environmental conservation, types of environmental, pollution our environment, environmentally friendly, environmental technology, environmental studies, environmental problems environmental, management system clean environment, causes of environmental pollution, green environment, environmental accounting environmental policy, political environment, the environment types of environment, environmental ethics, environment day 2019, plastic waste effects of environmental pollution, environmental impact,environmental psychology, global environmental issues.

#Kids#shoes for girls#children#girls party dresses#flower girl dresses#girls dresses#shoes for boys
#baby dress#shirts for boys#baby girl dresses
#party wear dresses for girl#sandals for girls#adidas shoes for girls#baby boy dress#boys t shirts#boys dress
#girls clothes#kids dress#boys fashion#new born baby dress#long dresses for girls#fancy dress for kids
#jumpsuit for girls#dress designs for girls#children dress#new dress for girls#kids wear#kids shoes
#baby girl shoes#kids clothes#gown for girls#kids fashion#white shoes for girls
#beautiful dresses for girls#skirts for girls#baby boy shoes#designer baby clothes
#girls dress shoes#sweater for girls#boys clothes#girls dresses online#baby girl gifts#white dresses for girls
#baby boy gifts#baby girl party dresses online#black shoes for girls#girls christmas dress#kids shop

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.