Saturday, November 9, 2024
Homeகல்விவிசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களுக்கான உட்படுத்தல் கல்வியினை மேம்படுத்தலும் வலுப்படுத்தலும்

விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களுக்கான உட்படுத்தல் கல்வியினை மேம்படுத்தலும் வலுப்படுத்தலும்

- Advertisement -
விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களுக்கான உட்படுத்தல் கல்வியினை மேம்படுத்தலும் வலுப்படுத்தலும் 1
Cute little girl with painted hands. Isolated on grey background.

உட்படுத்தல் கல்வி என்பது..,

- Advertisement -

“உட்படுத்தல் கல்வி என்பது மாணவர்களின் கற்றல் தடைகளை குறைத்து அனைவருக்குமான கல்வி இலக்கினை அடைய வைப்பதற்கான ஒரு முறைமை ஆகும்.”

விசேட தேவையின் வகைகள்

- Advertisement -
  • கேட்டல் குறைபாடு
  • பார்வை குறைபாடு
  • பல்வகை விசேட தேவைமன வளர்ச்சி குன்றியோர்
  • கேட்டல் மற்றும் பார்வைக் குறைபாடு
  • மீத்திறன் கூடியவர்கள்
  • கற்றல் இயலாமை உடையவர்கள்
  • ஓட்டிசம்
  • உணர்சிகள் சார்ந்த குறைபாடுகள்
  • மொழி மற்றும் பேச்சுக்குறைபாடு
  • மூளையில் பாதிப்பு
  • சுகாதார குறைபாடு
  • உடலியல் குறைபாடு

விசேட தேவையுடைய சிறுவர்களது உரிமைகள்

- Advertisement -
  1. பாகுபாடு காட்டப்படாமை
  2. சிறுவர்களது நலன்
  3. உயிர் வாழ்தலும் மற்றும் விருத்தி செய்தல் / மேம்படுத்தல்
  4. பங்குபற்றல் மற்றும் உட்படுத்தல்

விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களுக்கான உட்படுத்தல் கல்வியினை மேம்படுத்தலும் வலுப்படுத்தலும் 2

விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு இலங்கை அரசு வழங்கும் சலுகைகள்

  • பார்வையற்றோருக்கு பிறையில் ஊடாக வினாத்தாள்கள் வழங்கப்படுதல்.
  • அவ்வசதி இல்லாத பாடசாலைகளில் பரீட்சை நிலையங்களில் வினாத்தாள்கள் வாசிப்பதற்கு மேற்பார்வையாளர் ஒருவரை வழங்குதல்.
  • பரீட்சை எழுதுவதற்கு மேலதிகமான நேரத்தை வழங்குதல்.
  • எழுதுவதற்கு சிரமப்படும் விண்ணப்பதாரர்களுக்கு விடைகளை வாய்மொழி மூலம் வழங்குவதற்கும் அதனை ஒளிப்பதிவு செய்து மற்றும் அச் சந்தர்ப்பத்திலேயே வாய் மொழி மூலம் வழங்கப்படும் விடைகளை எழுதுவதற்கு விசேட மேற்பார்வையாளர் ஒருவரை வழங்குதல்.
  • சைகை மொழி மூலம் பாவிக்கப்படும் கேட்டல், பேச்சு சிரமமுடைய விண்ணப்பதாரர்களுக்குமொழி பெயர்ப்பாளர் ஒருவரை வழங்குதல்.
  • வெவ்வேறு விசேட தேவை உடையவர்களுக்கும் பரீட்சை மண்டபத்திற்கு உள்வருவதற்கு பெற்றோரின் உதவியினை வழங்குதல்.
  • விசேட இயலாமைகளை கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு மேற்பார்வையாளரின் உதவியுடன் தொடர்ந்து ஏற்படும் தேவைகளைப் பூர்த்தியாக்கிக் கொள்வதற்கு உதவுதல்.
  • பரீட்சை திணைக்களத்தினால் பரீட்சைக்கு முன்பு மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டுக்கு பின்பு ஒவ்வொரு விசேட தேவை வகைக்கு ஏற்ப பரீட்சைக்குரிய சலுகைகள் வழங்கப்படும்.
  • பார்வையற்ற விண்ணப்பதாரர்களுக்கு உரிய நேரத்தை வழங்குவது தொடர்பாக பரீட்சை நிலைய அதிகாரிகளின் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கையேட்டில் பாடங்களுக்கு இணங்க மற்றும் எழுதுவதற்கு பாவிக்கப்படும் உபகரணங்களுக்கு இணங்க மேலதிக நேரம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பல்கலைக்கழக ஒதுக்கீட்டில் 3%  ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விசேட தேவையுடையவர்கள் சமூக சேவை திணைக்களத்தால் வழங்கப்படும் சகல சலுகைகளுக்கும் உரித்தானவர்களாக இருப்பதுடன் அதனை பெற்றுக்கொள்ள வசதிப்படுத்தல்.

உட்படுத்தல் கல்வியின் முக்கியத்துவம்

  • அனைத்துப் பிள்ளைகளையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு
  • மேம்பட்ட கல்விக்கான வாய்ப்பு, தொடர்பாடல் திறன் மற்றும் சமூக திறன்
  • அதிக நண்பர்கள்
  • சகபாடிகளின் சாதகமான தன்மை
  • தனிமைப்படுத்தப் படவில்லை என்ற புத்துணர்வு
  • அயல் பாடசாலைகளில் இலகுவாக கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பு
  • வேறுபாடற்ற ஒருங்கிணைந்த கல்விக்கான வாய்ப்பு
  • கற்றலுக்கான அதிக ஊக்கப்படுத்தல்
  • புதுவிதமான கற்றல் உத்திகளுக்கான சந்தர்ப்பம்.

விசேட தேவையுடைய சிறுவர்களது கல்வியை பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ள வேண்டியவர்கள்

  • அதிபர், ஆசிரியர்
  • வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்
  • கிராம மட்ட சிறுவர் அபிவிருத்தி குழு
  • கிராம சேவகர்
  • விசேட தேவையுடையவர்களுடன் பணிபுரியும் அரச சார்பற்ற நிறுவனங்கள்
  • சிறுவர் கழகங்கள்
  • விசேட தேவையுடைய பிள்ளைகளின் பெற்றோர்கள்
  • இளைஞர், யுவதிகள்

விசேட தேவையுடையவர்களாயினும் …..

               வெற்றியாளர்கள்

“ஏஞ்சலினா மகறோவா” Downs Syndrome

anjelina-makarowa-kidhours
anjelina-makarowa-kidhours

நீச்சல் வீராங்கனையான இவர் டவுன்ஸ் சின்றோம் (மன நலிவு) எனும் குறைபாடுடையவர் தற்பொழுது உதைபந்தாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.

“ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்” Autism

Black-hole-picture-albert-einstein-theory-general-relativity-black-hole-kidhours
Black-hole-picture-albert-einstein-theory-general-relativity-black-hole-kidhours

பௌதிகவியலின் தந்தை என அழைக்கப்படும் ஐன்ஸ்டைன் என்பவர் ஒரு ஓட்டிசம் (மதியிறுக்கம்) எனும் விசேட தேவை உடையவர்.

“டானியல் ரட்க்ளிவ்” Neurological Disorder

daniel-harry-potter-kidhours
daniel-harry-potter-kidhours

ஹரிபொட்டர் திரைப்படத்தின் கதாநாயகன் நரம்பியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு செயற்திறன் குறைந்த ஒரு உலகப்புகழ் பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார்.

“ஸ்டீவன் ஹாக்கின்ஸ் ” Motorneuron Disease

hawking
hawking

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அண்டவியல் விஞ்ஞானியான இவர் உடம்பியக்கம்ற ஒருவர்.

“திலினி நிமேஷா” Physically Disable

thilini-nimesha-kidhours
thilini-nimesha-kidhours

இலங்கையின் முதலாவது விசேட தேவை உடைய பட்டதாரியாக பேராதனை பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞான கற்கை நெறியை பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளார்.

விசேட தேவையுடைய எமது சிறுவர்களையும் உட்படுத்தல் கல்வியின் ஊடாக வெற்றியாளர்கள் ஆக்குவது எமது பொறுப்பு வாய்ந்த கடமைகளில் ஒன்றாகும்.

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.