Friday, October 18, 2024
Homeபொழுது போக்குசிறுவர் விளையாட்டுகளும் விளையாடும் முறைகளும்  Kids Games

சிறுவர் விளையாட்டுகளும் விளையாடும் முறைகளும்  Kids Games

- Advertisement -

1.உரியடி

- Advertisement -

siruvar vilaiyattu

பொதுவாக திருவிழாக்களில் இன்றியமையாத இடத்தை எப்பவும் பிடித்திருக்கும் விளையாட்டு, உரியடி.

- Advertisement -

சமூக கட்டமைப்பிற்குள் தமிழர்கள் வைத்துள்ள எண்ணற்ற செயல்பாடுகளில் ஒன்றுதான் திருவிழா. அற்புதமான ஒன்றுகூடல், அதன் வாயிலாக ஒவ்வொருவரும்  உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதும் இன்றுவரை தொடரும் தமிழர் வழக்கம். அதிலும் திருவிழாக்களில்  விளையாட்டுகள் இல்லாமல் இருக்காது.

- Advertisement -

உரியடி விளையாட்டு எனவும் பானை உடைக்கும் போட்டி என வழக்கு மொழியிலும் அழைக்கப்படும் இந்த விளையாட்டு திருவிழாக்களில் மட்டுமே விளையாடிய காலம் மாறி நண்பர்கள் ஒன்றுகூடல் என விளையாடுவதை  நாம் பார்க்க முடிகிறது.

விளையாட்டுக்கு தேவையான பொருட்கள் :

1) மண் பானை.

2) பானையின் உள்ளே வைப்பதற்கு வண்ண காகிதம் (அ) பூக்கள் (அ) மிட்டாய் (அ) பணம் .  (பொதுவாக திருவிழாக்களில் கட்டப்படும்  பானையின்  உள்ளே மஞ்சள் தண்ணீர் ஊற்றி இருப்பார்கள், பணமும் வைப்பதுண்டு. )

3) சுமார் 10-15 அடி உயரமான இரண்டு மரமும் அதற்கு இடையே  பானை கட்டுவதற்காக கொச்சக்கயிறும்.

4) ஐந்து அடி நீளமுள்ள குச்சி (அ) மூங்கில்.

5) கண் கட்டுவதற்கு துணி.

விளையாடும் முறை :

இரண்டு கம்புக்கும் நடுவில் கயிறால் பானையை கட்ட வேண்டும்.விளையாட்டிகு தயாரானவர்கள் ஒருவர் பின் ஒருவராக தொங்கவிடப்பட்டுள்ள பானையில் இருந்து மூன்றடி தள்ளி நின்றிருக்க வேண்டும்.முதலில் விளையாட தயாராக இருப்பவரது கண்கள் துணியைக் கொண்டு  கட்டப்படும்.

பின்பு மூன்று முறை அவரைச்சுற்றி பானைக்கு எந்த பக்கமாக இருக்கிறோம் என்று அவரை குழம்பச் செய்ய வேண்டும். அப்படியே நேராக சென்று ஒரே போடு பானை மேல் போட்டால் அவர் வென்றவர் ஆவார். ஆனால் சுற்றி நின்றிருக்கும் கூட்டத்தில் இருப்பவர்கள் நேரா போ இல்ல இல்ல வலது பக்கம் போ ..இல்ல இல்ல இடது பக்கம் போ என்று குழப்பி விடுவார்கள்.மேலும் கையில் வைத்திருக்கும் குச்சியை பானையை நோக்கி அடிக்க உயர்த்துவதற்கு ஒரே ஒரு முறை தான்  வாய்ப்பு  வழங்கப்படும்.

ஆகவே இந்த விளையாட்டு பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும் பானை உடைத்தல் என்பது கடினமான ஒன்று தான். அவருக்கான வாய்ப்பு முடிந்தால் அடுத்தவருக்கு வாய்ப்பு வழங்கப்படும். இறுதியாக பானையை உடைத்தவர் வென்றவராவார். பானைக்குள் இருக்கும் பரிசுகள் அவருக்கு சொந்தமாகும்.

காளையர்கள் மட்டுமே விளையாடிய இந்த விளையாட்டு சிறு பிள்ளைகளை வெகுவாக ஈர்த்த காரத்தினால் அளவான உயரத்தில் பானையை கட்டி ,அளவான குச்சியை பிள்ளைகளின் கைகளில் கொடுத்து அடிக்கச் சொல்லி விளையாடுவது பரவலாக பல இடங்களில் காண முடிகிறது.

தன் இலக்கை திசை திருப்பக்கூடிய சூழல் சுற்றி இருந்தாலும் இலக்கின் மேல் கவனமும் அதற்காக  மனதை ஒருமுகப்படுத்துவதும் இந்த விளையாட்டின் சிறப்பம்சமாகும்.

இதே போன்ற விளையாட்டு பல நாடுகளிலும் வெவ்வேறு பெயர்களில்  விளையாடுகிறார்கள்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் (philippine) ‘ஹம்பஸ் பலயோக் ‘ ( HampasPalayok )என்ற பெயரில் இதே விளையாட்டு விளையாடுகிறார்கள்.அப்படியே உரியடியைப் போலவே இந்த விளையாட்டு அமைந்திருக்கும்.

இதே போல் ஜெர்மனியில்Jopfschlagenஎன்ற பெயரில்  விளையாடப்படும் விளையாட்டு உரியடி போன்ற விளையாட்டே ஆகும் ஆனால் சிறு மாற்றத்தோடு விளையாடுகிறார்கள். மழைக்காலத்தில் வீட்டிற்கு உள்ளே குழந்தைகள்  விளையாடும் வண்ணம் இந்த விளையாட்டை அமைத்திருக்கிறார்கள்.மெட்டல் பானையை(metal pot )வீட்டின் உள்ளே விளையாடும் அறைக்குள் ஒளித்து வைத்துவிடுவார்கள்.

அதன் அடியில் மிட்டாய்கள் கொட்டப்பட்டிருக்கும். கண்கள் கட்டப்பட்ட குழந்தையின் கையில் நீளமான துச்சி அல்லது மர கரண்டி கொடுக்கப்படும்.தவழ்ந்து கொண்டே குச்சியை நீட்டி பானையை தேட வேண்டும். பானையை தொட்டுவிட்டாலே விளையாட்டு நிறைவுபெறும். மிட்டாய்கள் அத்தனையும் அந்த குழந்தைக்கு கொடுக்கப்படும்.இப்படியாக ஒருவர் பின் ஒருவராக இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள்.

இதே போல் ஸ்பானிஷ் நாட்டிலும் மெக்சிகோவிலும் பினாட்டா (pinata ) என்ற பெயரில் உரியடி போன்ற விளையாட்டு விளையாடுகிறார்கள்.

ஜப்பான் நாட்டில் Suikawari (ஸ்யுகாவரி ) என்னும் பெயரில் விளையாடும் விளையாட்டும் ஜெர்மனியில் விளையாடும் jopfschlagenவிளையாட்டைப்போல் தரையில் உடைக்கும் விளையாட்டாகும். கோடைக்காலத்தில் விளையாடப்படும் இந்த விளையாட்டு பெரும்பாலும் கடற்கரையிலும் விழாக்களிலும் ஒன்றுகூடலிலும்  விளையாடுகிறார்கள். இந்த விளையாட்டின் சிறப்பென்பது பானைக்கு பதிலாக தர்பூசணி பழம் வைத்து விளையாடுகிறார்கள்.

கண்கள் கட்டப்பட்ட நிலையில் தரையில் வைக்கப்பட்டிருக்கும் தர்பூசணியை குச்சியால் தொட்டு இரண்டாக உடைக்க வேண்டும். பின்பு  அனைவரும் பழத்தை பகிர்ந்து உண்கிறார்கள்.

இப்படியாக நமது பாரம்பரிய மரபு விளையாட்டான உரியடி விளையாட்டைப் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் இன்றளவும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். காலமுறைப்படிப் பார்த்தால் இவற்றிற்கெல்லாம் மூத்த குடியாகிய நம்மின் உரியடியே வயது மூத்த விளையாட்டு.

 

சில்லு விளையாட்டு (கெந்திக்கோடு – பேச்சு வழக்கு)

சிறுவர் விளையாட்டுகளும் விளையாடும் முறைகளும்  Kids Games 1

தட்டையான சிறு சில்லை அரங்கத்தில் போட்டு, அதனைக் காலால் மிதித்து, அரங்கத்துக்கு வெளியே எத்தித்தள்ளி, அதனை மிதித்து விளையாடுவது சில்லு விளையாட்டு எனப்படும். உடைந்த மண்பாண்டத்து ஓட்டில் சுமார் மூன்று அங்குல அளவு விட்டமுள்ள சிறு ஓட்டினைச் சில்லு என்பர். சில்லு விளையாட்டு விளையாடும் அரங்கு தரையில் சில்லால் கோடு கிழித்து அமைக்கப்படும். விளையாடும் அரங்கிலிருந்து சுமார் 10 அடி தொலைவில் ஒரு உத்திக்கோடு வரையப்படும்.

  1. உத்திக் கோட்டிலிருந்து அரங்கின் முதல் கட்டத்தில் சில்லை எறிவர். எறியும் சில்லு அரங்கக் கோட்டில் படாமல் கிடக்க வேண்டும். கோட்டில் படக்கூடாது, கோட்டில் பட்டால் அடுத்தவர் ஆடுவார்.
  1. உத்திக் கோட்டிலிருந்து நொண்டி அடித்துக்கொண்டு சென்று அரங்கில் கிடக்கும் சில்லை அதேநொண்டிக் காலால் ஒரே தவ்வில் மிதித்துப் பின்னர் அதே காலால் சிலலை அரங்கிற்கு வெளியே எத்தி, ஒரே தவ்வில் அதே நொண்டிக் காலால் மிதித்தால் பழம். பிழை நேர்ந்தால் அந்த ஆட்டப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படுவார். எந்த ஆட்டப் பகுதியில் பிழை நேர்ந்ததோ அந்த ஆட்டப் பகுதியிலிருந்து அடுத்த ஆட்டமுறை வரும்போது ஆட்டத்தைத் தொடரலாம்.
  1. பழம் பெற்றால் அடுத்த கட்டத்தில் இதேப்போல் ஆட்டம். முதல் கட்டம், இரண்டாம் கட்டம் என வரிசை முறையில் சில்லு எறிந்து ஆடி முடித்தபின் மச்சு ஆட்டம்.

உத்தி கோட்டிலிருந்து அரங்கு வரையில் நொண்டி அடித்துக்கொண்டு சென்று, அரங்கின் முதல் கட்டத்தில் இரு கால்களையும் ஊன்றிக்கொண்டு நிற்பர். ஆடிய சில்லைத் தலையில் வைத்துக்கொண்டு தன் கண்களை தானே இரு கைகளாலும் பொத்திக்கொண்டு இரண்டு தப்படி வைத்ததும் சரியா, தப்பா என்று கேட்டுக்கொண்டே ஒவ்வொரு கட்டமாகத் தாண்டி நடந்து செல்வர். கோட்டை மிதித்திருந்தால் தப்பு, சரி என்றால் அடுத்த தப்பிகள். கடைசி கட்டத்தில் சரி என்றதும் தலையிலுள்ள சில்லைக்குனிந்து தரையில் போடவேண்டும்.

பிறகு கண்ணைக் திறந்துக்கொண்டு அந்தச் சில்லை மிதிக்க வேண்டும். மிதிக்கும் இந்த இடத்தை மலை என்று கூறுவர். இங்கு நின்றுகொண்டு ஆனையா, பூனையா என்று கேட்டபர். மற்றவர் ஆனை என்று சொன்னால் ஆனை தன் கையால் தண்ணீரை உறிஞ்சித் தன் தலைக்கு மேல் கையை உயர்த்தி நீரை விசிறுவது போலச்சில்லை அரங்குக்கு வெளியே பின்பக்கமாக எறிந்துவிட்டுக் கட்டங்களில் நடந்துவந்து கட்டத்திலிருந்து தவ்வி மிதிக்க வேண்டும்.

சில்லை மிதித்து விட்டால் அரங்கின் ஓரத்தில் ஒரு கட்டம் போட்டு அதனைக் தன் மச்சு என்று வைத்துக்கொள்ளலாம். அடுத்த ஆட்டத்தில் நொண்டி அடித்துக்கொண்டு செல்லும்போது தன் மச்சில் தான் இரண்டு கால்களையும் ஊன்றிக்கொள்ளலாம். அதிக மச்சு கட்டியவர் வென்றவர் ஆவார். பூனை என்று மற்றவர் சொன்னால் குனிந்து சில்லை எறிந்து அவ்வாறே மிதிக்க வேண்டும். மேல்காலின் மேல் சில்லை வைத்துக்கொண்டு கண்ணைத்திறந்துகொண்டு நடத்தலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

இது போன்ற தமிழ் மரபு விளையாட்டுக்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்து கொள்வோம்…..

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.