Wednesday, December 18, 2024
Homeசுகாதாரம்சிறுவர்களின் சிறந்த உடல் வளர்ச்சிக்கு இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்

சிறுவர்களின் சிறந்த உடல் வளர்ச்சிக்கு இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்

- Advertisement -

ஆரம்ப காலம் தொட்டு எமது உடலுக்கு சக்தியை சர்க்கும் வகையில் பழவகையான உணவுகளை மக்கள் உட்க்கொண்டு வந்தனர் இவ்வாராண உணவு தேடுதல் ஆரம்ப மனிதனின் வேட்டையாடுதலும் உணவு தேடுதலிலும் (hunting and gathering) இருந்தே உருவானது இருப்பினும் நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வனாக வாழ்ந்தான் அனால் தற்காலத்தில் தேவையிலும் பார்க்க அதிக வசதி வாய்ப்புக்கள் இருந்தும் ஒவ்வொரு மனிதனும் நல்ல உணவுகளை தேடி அலைகிறான் என்பதே நியதியாகிவிட்டது.

- Advertisement -

kidhours_உனவு

எவ்வராயினும் மனிதக்கு வாழ்வில் உடல் வளர்ச்சி என்பது மிக முக்கியமாகும். உடலின் உறுப்புகள் சரியான முறையில் வளர்ச்சி பெறவில்லையெனில் அது நமது ஆரோக்கியத்தையும் சேர்த்தே பாதிக்கும். நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் நமது உடல் வளர்ச்சிக்கு முக்கியமானதாகும். குறிப்பாக புரதசத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொண்டால் உடல் வளர்ச்சி அதிகரிக்கும்.
சிறு வயது முதலே நாம் எடுத்து கொள்ளும் உணவில் அதிக கவனம் செலுத்தினால் உடல் வளர்ச்சியில் எந்த வித பாதிப்புகளும் உண்டாகாது. ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு அவசியம் வழங்க வேண்டும். உடல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டுமென்றால் எந்தெந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதை இனி அறிந்து கொள்ளலாம்.

- Advertisement -

முட்டை
புரதசத்து அதிகம் கொண்ட உணவுகளில் முட்டை முதல் இடத்தில் உள்ளது. குழந்தைகளின் உணவில் முட்டை மிக முக்கிய உணவாகும். இவை உடல் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக உதவும். கூடவே செல்களின் வளர்ச்சியும் அதிகரிக்க உதவும். பொரித்த முட்டையை காட்டிலும் வேக வைத்த முட்டை தான் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை தரும்.

- Advertisement -

முழு தானியங்கள்

kidhours_
பருப்பு வகைகள், முழு தானியங்கள் போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு அதிக அளவில் தர வேண்டும். இதனால் அவர்களின் மெட்டபாலிசன் சீராக வேலை செய்யும். மேலும், உடல் வளர்ச்சியை அதிகரிக்க முழு தானியங்கள் பெரும்பாலும் உதவும். அன்றாட உணவில் இதன் பங்கு இன்றியமையாததாகும்.
பால்
குழந்தைகளின் வளர்ச்சி பாலில் அதிகமாகவே உள்ளது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பால் சிறந்த உணவாகும். அத்துடன் இது உடல் வளர்ச்சிக்கும் நன்கு உதவும். கால்சியம், வைட்டமின் டி, புரசத்து போன்றவை இதில் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு அவசியம் இதனை தினமும் கொடுக்க வேண்டும்.
சிக்கன்
பிராய்லர் கோழிகளை காட்டிலும் நாட்டு கோழிகளை குழந்தைகளின் உணவில் சேர்த்து கொள்ளலாம். இது அவர்களின் உடல் வளர்ச்சிக்கு சிறப்பாக உதவும். காரணம் இவற்றில் உள்ள அதிக படியான புரதம் தான். வாரத்திற்கு 1 முறையாவது இதனை குழந்தைகளின் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
சோயா பீன்ஸ்
ஆரோக்கியமான உணவுகளில் சோயா பீன்சும் ஒன்று. சிக்கன், முட்டை பிடிக்காத குழந்தைகளுக்கு இதனை பரிமாறலாம். இவற்றில் புரதசத்து அதிக அளவில் இருப்பதால் உடல் நலத்திற்கு சிறப்பாக உதவும். அத்துடன் முழு உடல் வளர்ச்சிக்கும் இது பயன்படும்.
காய்கறிகள்

kidhours_மரக்கரிகள்
குழந்தைகளின் உணவில் இரும்புசத்து சத்து, மெக்னீசியம், வைட்டமின் பி, ஏ, கே போன்றவை அதிக அளவில் உள்ள காய்கறிகளை சேர்த்து கொள்வது நல்லது. முக்கியமாக கேரட், பீட்ரூட், பீன்ஸ், ப்ரோக்கோலி, கீரை வகைகள் ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
பழங்கள்

kidhours_பழங்கள்
பொதுவாகவே குழந்தைகளுக்கு அந்தந்த பருவ நிலைகளில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட கொடுத்தாலே உடலின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும், இது போன்ற பருவ நிலை பழங்கள் எதிர்ப்பு சக்தி குறைபாட்டை குறைக்கும்.
வளர்ச்சி குறைபாடு
குழந்தைகளின் உடலில் சீரான வளர்ச்சி இல்லையென்றால் அது அவர்களின் எதிர் காலத்தையே பாதித்து விடும். எனவே, குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவை ஒரு முறைக்கு பல முறை சரி பார்த்து விட்டு வழங்குவது நல்லது. மேலும், கடைகளில் விற்கும் கண்ட உணவுகளை குழந்தைகளுக்கு தருவதை தவிர்க்கவும்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

kidhours_மருந்து

வைட்டமின் ‘ஏ’

வைட்டமின் ‘ஏ’ குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம்.

முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிகம் காணப்படுகிறது.

வைட்டமின் ‘பி’
வைட்டமின் ‘பி’ குறைந்தால், குழந்தைகளுக்கு வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும்.

கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் வைட்டமின் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

வைட்டமின் ‘சி’
வைட்டமின் ‘சி’ குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும்; பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.

ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

வைட்டமின் ‘டி’
வைட்டமின் ‘டி’ இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.

போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் ‘டி’யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் ‘டி’ அதிகம் உள்ளது.

வைட்டமின் ‘ஈ’
வைட்டமின் ‘ஈ’ குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், இரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும்.

kidhours_vitamins

கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் ‘ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.