இன்றைய காலத்தில் நாம் அனைவரும் விரும்புவது எமது பிள்ளைகளின் ஆரோக்கியமான உடல்நலத்தையும். சிறந்த மனவளத்தையும் தான். ஆனால் அது எவ்வளவு தூரம் சாத்தியமாகின்றது.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இந்த பழமொழி நூற்றுக்கு நூறு உண்மை. நம்மிடம் எத்தனை இருந்தாலும், ஆரோக்கியமான வாழ்வு இல்லாவிடில் அது நம் வாழ்நாள் முழுவதும் சிக்கல்களை உண்டாக்கும்.
உணவே ஆரோக்கியம் என்று சிலர் கூறுவார்கள். ஆனால், உணவு மட்டும் இல்லாது வேறு பல பொருட்கள் உள்ளது. ஆம், உணவு முக்கியம் தான். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், சில பொருட்களின் விலைகள் அதை பின்னுக்கு தள்ளுகின்றது. எளிதாக சொன்னால், பணம் நமது ஆரோக்கியத்தை அழிக்கின்றது.உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது, ஆனால் ஆரோக்கியமான இளைஞர்களை கொண்ட நாடாக இருக்கிறதா என்றால் அதற்கு பதில் இல்லை என்பதுதான். இந்திய இளைஞர்களை காட்டிலும் குழந்தைகளின் ஆரோக்கியம் என்பது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. உலகிலேயே ஆரோக்கியம் குறைவாக உள்ள குழந்தைகள் உள்ள நாடுகளில் இந்தியா முக்கியமான இடத்தில் உள்ளது.இதற்கு காரணம் நம் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே இருக்கும் மோசமான ஆரோக்கியமில்லாத உணவுமுறைதான். அதேசமயம் அதிக ஆரோக்கியமான குழந்தைகள் உள்ள நாடுகளில் முதலிடத்தில் இருப்பது இரண்டாம் உலகப்போரில் இரண்டு அணுகுண்டுகளை வாங்கிய ஜப்பான்தான்.
பொருளாதாரத்திலும் சரி, தனிநபர் ஆரோக்கியத்திலும் சரி ஜப்பான் மிகப்பெரிய வல்லரசாக இருக்க காரணம் அவர்களின் தனிநபர் சார்ந்தஒழுக்கமும், கட்டுப்பாடான உணவுமறையும்தான். இந்த பதிவில் ஜப்பான் குழந்தைகள் ஏன் மற்ற நாடுகளின் குழந்தைகளை விட அதிக ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
திருப்திகரமான ஊட்டச்சத்துக்கள்
ஜப்பானியர்களின் உணவு பொதுவாக சிறிது சாப்பாடு, நிறைய காய்கறிகள், பழங்கள், ஊறுகாய், சிறிதளவு மாமிசம், சர்க்கரை மற்றும் பாலாக இருக்கும். இது அவர்களின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு நீண்ட நேரம் பசியையும் கட்டுப்படுத்தும். இவர்கள் குழந்தைகளுக்கு மாமிசத்தை விட காய்கறிகளை அதிகமாக கொடுப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
உணவு கொண்டாட்டம்
ஜப்பானியர்களின் இரவு நேர உணவின் பொது உணவு மேசையை சுற்றி மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் நிறைந்திருக்கும். குழந்தைகள் அனைத்து உணவையும் சுவைப்பார்க்க ஊக்குவிக்க படுகிறார்கள். ஆனால் தட்டில் இருக்கும் அனைத்து உணவையும் சாப்பிட்டு விட்டுத்தான் எழ வேண்டும். பெற்றோர்கள் தாங்கள் சாப்பிடும் உணவை மகிழ்ச்சியுடன் உண்கிறார்கள், இதுவே குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. உங்கள் குழந்தை மறுத்தாலும் அவர்களுக்கு புதிய ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுவதை கட்டயமாக்குங்கள். குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே ஆரோக்கியமான பழக்கங்களை கற்றுக்கொடுப்பது மிகவும் எளிது.
சிறிய அளவு
ஒரு ஜப்பானிய பழமொழி கூறுவது என்னவெனில் ” ஒருவரின் வயிறு எப்போதும் 80 சதவீதம் நிறைந்திருந்தால் அவர்களுக்கு மருத்துவரே தேவையில்லை ” என்பதாகும். அவர்களின் இரவு உணவானது பல உணவுகளாலும் சிறிய அளவினாலும் நிறைந்திருக்கும். அவர்கள் சாப்பிடுவதில் ஒரு ஒழுங்கு முறையை பின்பற்றுகிறார்கள், முதலில் சாப்பாடு பின்னர் சூப் அதன்பின் காய்கறிகள் அதற்குபின் இறுதியாக மீன் அல்லது மாமிசம். இதனை செய்ய வீட்டில் அனைவருக்கும் சிறிய தட்டுகள் வைக்கப்படுவதுடன் அவரவர் உணவை அவரே பரிமாறி கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
குழந்தைகளின் செயல்பாடு
பெரும்பாலான ஜப்பானிய குழந்தைகள் நடந்தோ அல்லது சைக்கிள் மூலமாகத்தான் பள்ளிக்கு செல்கின்றனர் அவர்கள் பெற்றோர்கள் அவர்களை பள்ளிகளில் விடுவதில்லை. ஆய்வுகளின் படி 98 சதவீதகுழந்தைகள் காரில் பள்ளிக்கு செல்வதில்லை. இது அதிகளவு கலோரிகளை எரிப்பதுடன் சரியான நேரத்தில் அவர்களுக்கு பசியெடுக்கும் படியும் செய்கிறது. மேலும் குழந்தைகள் அவர்களின் தினசரி உடற்பயிற்சியை ஆர்வத்துடனும் செய்கிறார்கள்.
ஒற்றுமையான வாழ்க்கை முறை
ஜப்பானிய குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க காரணம் அவர்கள் குடும்பம் ஆரோக்கியமான உணவுகளையும், வாழ்க்கை முறையையும் ஆதரிப்பதால்தான். அவர்கள் இல்லத்தில் எப்பொழுதும் ஆரோக்கியமான உணவுகள் இருக்கும், குழந்தைகளும் உணவு தயாரிப்பில் பங்கு கொள்கிறார்கள். தொடர்ந்து அவர்கள் குடும்பத்துடனேயே உணவு உண்கிறார்கள். குடும்பத்துடன் சேர்ந்து உணவருந்தும் போது அது எடைஅதிகரிப்பையும், உடல் பருமனையும் குறைக்கிறது.
ஆரோக்கியமான மதிய உணவு
ஜப்பானிய குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணம் அவர்களின் பள்ளிக்கூடம்தான். ஜப்பானில் குழதைகளின் மதிய உணவிற்கெனவே தனித்திட்டம் உள்ளது. தொடக்கப்பள்ளிகளில் இருந்தே குழந்தைகளுக்கு மதிய நேரத்தில் உள்ளூரில் விளைந்த பொருட்களை கொண்டு புதிதாக சத்தானஉணவுகள் தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுகிறது. ஆரோக்கியமாக இருப்பதுடன் இந்த உணவுகள் சுவையாகவும் இருக்கும்.
உணவுக்கட்டுப்பாடு
கடுமையான உணவுக்கட்டுப்பாடு என்பது ஜப்பானில் குழந்தைகளுக்கு ஒருபோதும் இல்லை. அவர்கள் விரும்பும் உணவுகள், நொறுக்குத்தீனிகள் என அனைத்திற்கும் அனுமதி உண்டு ஆனால் அளவில் அதிக அக்கறையுடன் இருப்பார்கள். ஆரோக்கியமற்ற உணவுகள் என்று வரும்போது குறைவான கட்டுப்பாடுகளை விதிப்பதுதான் ஜப்பானிய கலாச்சாரம் என்று ஜப்பான் மருத்துவர்கள் கூறுகிறார்கள். எப்போதாவது அதிக அளவில் சாப்பிடுவதை விட அடிக்கடி குறைந்த அளவில் சாப்பிடுவது குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், அவர்களுக்கு ஏக்கம் ஏற்படாமலும் வைத்திருக்கும்.
உங்களது வீட்டு வேலைகளின் பட்டியல் எப்போதும் நீண்டு கொண்டே தான் இருக்கும். அதற்காக உங்களது ஓய்வை நீங்கள் எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டாம்.. அதே நேரம் உங்களுக்கு தேவைப்படும் போது சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு உங்கள் பிள்ளைகளுடன் சிறிது நேரத்தை செலவு செய்யுங்கள். அதன்பின் உங்கள் வேலைகளை செய்யுங்கள்..
ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் எப்போதும் களைப்பாகவே இருப்பது, உங்கள் மீதான மற்றவர்களின் கவனத்தை குறைக்கும். மேலும் சிறுவர்களுடனான மகிழ்ச்சியான உரையாடல்கள், சந்தோஷமான தருணங்கள் போன்றவற்றை நீங்கள் தவறவிட வேண்டாம். நகைச்சுவை உணர்வு என்பது மிகவும் அவசியமானதாகும்.. எனவே எப்போதும் நகைச்சுவை உணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்… அவர்களுடன் மனம் விட்டு சிரித்து அவர்களின் சின்னச் சின்ன விளையாட்டுகளில் பங்கெடுத்து கொள்ளுங்கள்.
எப்போதும் இந்த இந்த வேலைகளுக்கு இந்த இந்த நேரம் என்று ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று ஆகும். அப்போது தான் உங்கள் பிள்ளைகளுடன் மற்றும் குடும்பத்துடன் ஒன்றாக நேரத்தை செலவிட முடியும். குறித்த நேரத்தில் ஒரு இடத்திற்கு செல்லுங்கள். இது மற்றவர்களுக்கு உங்கள் மீது உள்ள மதிப்பை அதிகரிக்கும். மேலும் அந்த அந்த நேரத்தில் அந்தந்த வேலைகளை செய்வதால், பயம், பதற்றம் போன்றவை குறையும்.
இது போன்ற சில சின்னச் சின்ன விஷயங்களில் மிகவும் கவனமாக இருப்பதால் உங்களைப் பார்த்தே உங்கள் பிள்ளைகளும் அவற்றை சிறு வயது முதலே பழகிக் கொள்வார்கள்.