லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ப்ரெண்ட்வுட் பகுதியில் பயங்கரமான காட்டுத்தீ கடந்த திங்கட்கிழமை பரவியது. இதனால், பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பிரபலங்களின் வீடுகள் தீக்கு இரையாகின. காட்டுத்தீ எச்சரிக்கையால் திடீரென வீட்டைவிட்டு வெளியேறிய பிரபலங்கள் இரவு தங்க இடம் இல்லாமல் தவித்துள்ளனர்.
பிரபல அமெரிக்க கூடைப்பந்து வீரர் லேப்ரான் ஜேம்ஸின் 23 மில்லியன் டாலர் வீடு எரிந்துவிட்டதால் வீடு இல்லாமல் தவித்து வருவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகரும் முன்னாள் கலிபோர்னியா மாகாண கவர்னரும் ஆன அர்னால்டு நடு இரவில் வீடு இல்லாமல் வேறு இடத்துக்கு இடம் மாறியுள்ளார்.அர்னால்டின் டெர்மினேட்டர் திரைப்படத்தின் பிரிமியர் காட்சி திங்கட்கிழமை இரவு திரையிடுவதாக இருந்தது. காட்டுத்தீயால் திரையிடல் ரத்து செய்யப்பட்டது. மேலும் நடிகர்கள் க்ளார்க் க்ரெக், ஹாலிவுட் பிரபலம் கர்ட் சட்டர் ஆகியோரது வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.