1.தோட்டக்காரம் குரங்கும்
அது ஒரு அழகிய கிராமம். ஆந்த கிராமத்தில் தோட்டக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் தோட்டத்தில் உள்ள செடிகொடிகளுக்கு தண்ணிர் ஊற்றி வந்தான். ஆவன் தண்ணீர் ஊற்றும் போதெல்லாம் அங்கு சில குரங்குகள் வந்து விளையாடும். புல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனும் குரங்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யூம் காரியங்களைப்பார்த்து பார்த்து குரங்குகளும் அப்படியே செய்துவந்தன.
ஒரு முறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தை சொன்னான். இச் செடிகளுக்கு யார் நீருற்றுவது? எனும் பிரச்சனையையூம் கூறினான் பின் யோசனை செய்துவிட்டு நீங்கள் செடிகளுக்கு நீர் ஊற்றுங்கள் என கூறினான். குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால் அவற்றுக்கு ஒரு பிரச்சனை. ஏந்தச்செடிக்கு எவ்வளவூ தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.
“அது ஒண்ணும் பெரிய பிரச்சனை இல்லை. வேர் பெரியதாக இருந்தால் நிறைய தண்ணீர் ஊற்றுங்கள். சிறிய வேராக இருந்தால் கொஞ்சமா தண்ணீர் ஊற்றுங்கள்” என்று யோசனை கூறினான். வெளியூ+ர் போய் திரும்பி வந்து தோட்டத்தைப்பார்த்தான். தோட்டக்காரன் அதிர்ச்சியில் அதர்ந்துப்போனான். அத்தனைச் செடிகளும் பிடுங்கப்பட்டு காய்துப்போய் இருந்தன. “என்னாச்சி?” என்றான் தோட்டக்காரன். ”வேர் பெருசா இருக்காஇ சின்னதா இருக்கானு பார்ப்பதற்காக பிடுங்கினோம்” என்றன குரங்குகள்.
நீதி:- புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது புத்தியில்லாத செயல்
2.ஒரு வியாபாரியின் கதை
அவன் ஒரு வியாபாரி. ஏதிர் காலத்தில் பெரிய தொழிலதிபராகவர வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் சரியாகத்திட்டமிட்டுச் செயல்படாததால் அவன் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது. மிகுந்த கவலையில் ஆழ்ந்த அவன் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல் ஊரைவிட்டு ஓதுக்குப்புறமாக இருந்த ஆற்றங்கரைக்குப் போனான். அங்கு மெல்லியநில் வெளிச்சத்தில் ஆற்று மணலில் அமர்ந்து நினைவுகளை ஓட விட்டான்.
வியாபாரத்தில் தேற்றுப்போன அவலம் அவனை அழுத்தியது. பங்குதாரர்கள் எப்படியெல்லாம் தனக்குத் துரோகம் செய்தார்கள் நம்பவைத்துக் கழுத்தறுத்தார்கள் என்று எண்ணியெண்ணி வேதனையில் மூல்கினான். தொடர்ந்து எப்படி வியாபாரம் செய்யப்போகிறோம்…. குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறௌம் போன்ற எதிர்கால கவலைகள் வேறு ஒறுபுறம் எழுந்து அடங்கின. இந்தச் சிந்தனையிலேயே அவன் வலக்கை அவனை அறியாமல் ஆற்று மணலைத் துழாவி கைக்குத் தட்டுப்பட்ட சிறு சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசிய வண்ணம் இருந்தான். இப்படியாக அன்றிரவு முழுவதும் அங்கேயே அமர்ந்திருந்தான்.
பெழுது விடிய ஆரம்பித்தது! வெளிச்சம் பரவியது. ஆற்றிலே வீசுவதற்கு அவனைச் சுற்றி இருந்த கற்கள் எல்லாம் தீர்ந்து போய்விட்டன. அவன் தன் கையில் இருந்த கடைசிக் கல்லைப்பார்த்தான் பிரமித்துவிட்டான். காரணம் சாதாரன கூழாங்கல் இல்லை. வூpலை உயர்ந்த வைரக்கல். யாரோ கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்து வந்த வைரக்கற்களை ஆற்றங்கரையிலேயே தவறவிட்டுவிட்டு ஓடியிருக்கிறார்கள். ஆவற்றைத்தான் அவன் இருட்டில் இன்ன தென்று அறியாமல் எடுத்து வீசியிருக்கிறான். ஒரு வகையில் பார்த்தால் நம்மில் பலர் அந்த வியாபாரி மாதிரித்தான். கடந்த காலம் மற்றும் எதிர்கால நினைவுகளில் மிதந்துக்கொண்டு நிகழ்காலம் என்ற வைரக்கற்களை வீணடித்துக்கொண்டிருக்கிறேம்.
3.ஆழகின் ஆபத்து
ஒரு நாள் கலைமான் ஒன்று தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காக நீர் நிலைக்கு வந்தது. நீரை அருந்தும் போது நீரில் தெரியும் தன் கொம்புகளின் நிலலைக் கண்டு பெருமிதம் அடைந்தது. ஆஹா! என் தலையில் உள்ள கொம்புகள் எவ்வளவு அழகாக இருக்கிறது. ஆனால் என் குச்சிக்கால்கள் என் அழகை கெடுக்கின்றது. என்று நினைத்தது. தன் அழகிற்கு ஏற்ற கால்கள் இல்லாததை எண்ணி தனக்குத்தானே வருந்தியது.
ஆந்த வேலையில் ஒரு சிங்கம் வந்துக்கொண்டிருந்ததைப் பார்த்த மான் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேகமாக ஓடியது. சுரங்கம் துரத்திக் கொண்டே செண்றது. வேகமாக ஓடும் போது மானின் கொம்புகள் செடி, கொடிகளில் மாட்டி; கொண்டு விடவே மானால் வேகமாக ஓட முடியாமல் அச்சிங்கத்திடம் மாட்டிக் கொண்டது. அப்போதுதான் மனதிற்கு புறிந்தது. ஏன் உயிரை காக்க உதவும் என் கால்களைப் பழித்தேன் எனக்கு எமனாக இருந்த என் கொம்புகளை புகழ்ந்தேன். நன்றி மறந்த எனக்கு இது சரியான தண்டனை என்று கூறி வருந்தியப்படி தன் உயிரை விட்டது.
நீதி:- அழகு ஆபத்தானது.
4.நோவா ஒரு பேழையைக் கட்டுகிறர்.
மக்கள் நோவாவைப் பார்த்து சிரிக்கிறார்கள். நோவாவுக்கு மனைவியும் மூன்று மகன்களும் இருந்தார்கள். மகன்களின் பெயர் சேம், காம், யாப்பேத். இந்த மூவரும் கல்யாணம் ஆனவர்கள். ஆகவே நோவாவின் குடும்பத்தில் மொத்தம் எட்டு பேர் இருந்தார்கள். இப்போது ஒரு புதுமையான காரியத்தை செய்யும் படி நோவாவிடம் கடவூள் சொன்னார். ஆம் ஒரு பெரிய பேழையைக் கட்டச் சொன்னார். இந்தப்பேழை ஒரு கப்பலை போல பெரிதாக இருந்தாலும் பார்ப்பதற்கு அது ஒரு நீளமான பெட்டியைக் போலவே இருந்தது. அதை மூன்று மாடி உயரத்திற்கு கட்டு, அதில் அறைகளையூம் உண்டாக்கு. என்று கடவுள் சொன்னார். நோவா மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கும், மிருகங்களுக்கும், அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருளைச் சேமித்து வைப்தற்கும் இந்த அறைகளைப் பயன்படுத்தச் சொன்னார்.
கடவூள் நோவாவிடம், தண்ணீர் உள்ளே புகுந்து விடாத பிதத்தில் பேழையைக் கட்டு என்று சொன்னார். ஒரு பெரிய ஜலப்பிளையத்தில் அதாவது வெள்ளத்தில் இந்த முழு உலகத்தையூம். ஆழிக்கப் போகிறேன். பேழைக்குள் இல்லாதவர்கள் அனைவரும் சாவார்கள் என்று கூறினார். நோவாவும் அவருடைய மகன்களும் அயகோவாவுக்குக் கீழ்படிந்து. பேழையைக் கட்டத் தொடங்கினார்கள். ஆனால் மற்ற ஆட்களுக்கு அதைப்பார்க்கப்பார்க்க ஒரே சிரிப்புத்தான்! கெட்ட காரியங்களையே அவர்கள் தொடர்ந்து செய்து வந்தார்கள். கடவுள் என்ன செய்யப் போகிறாரென்று நோவா அவர்களுக்குச் சென்னப்போது யாருமே அதை நம்பவில்லை.
நோவாவின் குடும்பத்தார் மிருகங்களையும் உணவையும் பேழைக்குள் கொண்டு செல்கிறார்கள். அந்தப்பேழையை கட்ட ரொம்ப காலம் எடுத்தது, எனென்ன்றால் அது அவ்வளவு பெரியதாக இருந்தது. குடைசியில் பல ஆண்டுகளுக்குப்பின் அது கட்டி முடிக்ப்பட்டது. இப்போது மிருகங்களையெல்லாம் பேழைக்குள் கொண்டு வரும்படி கடவுள் சொன்னார். சில வகை மிருகங்களில் ஓர் ஆண் ஓர் பெண்ணுமாக ஒரு யோடியையூம் மற்ற வகை மிருகங்களில் ஏழு ஏழாகவும் உள்ளே கொண்டு வரும்படி சொன்னார். கடவுள் சொன்னபடியே நோவா செய்தார்.
புல்வேறு வகையைச் சேர்ந்த எல்லாப் பறவைகளையும் உள்ளே கொண்டுவரும்மடி சொன்னார் கடவுள். ஆதன் பிறகு நோவாவின் குடும்பத்தாரும் பேழைக்குள் சென்றார்கள். பின்பு கடவுள் கதவை முடினார். ஊள்ளே அவர்கள் காத்திருந்தனர்.
5.முல்லா ஏன் அழுதார்
ஒரு நாள் முல்லா தனியே அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அதைப்பார்த்த அவருடைய நண்பர் முல்லாவிடம் ஏன் அழுகிறாய்? ஏன்று கேட்டார். ஆதற்கு முல்லா சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து லட்சம் ரூபாய் சொத்தை எனக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார். புதினைந்து நாட்களுக்கு முன் எனது பெரியப்பாவும் இருபது லட்சம் ரூபாய் செத்தை எனக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார். எனது அத்தை சென்ற வாரம் எனக்கு முப்பது லட்சம் ரூபாய் சொத்தை எனக்கு எமுதி வைத்துவிட்டு அவரும் இறந்துவிட்டார்.
எனது தாத்தா மூன்று நாட்களுக்கு முன் 50 லட்சம் ருபாயை இறக்கும் முன் எனக்கு எழுதி வைத்துவிட்டார். ஏன்று கூறிவிட்டு, மேலும் முல்லா அழுகையை நிறுத்தாமல் அழுதுக்கொண்டே இருந்தார். ஆதற்கு நண்பர் உனக்கு கிடைத்த இவ்வளவூ ரூபாய்களை வைத்து சந்தோஷப்படாமல் ஏனப்பா அழுகிறாய்? ஏன்று கேட்டார் அதற்கு முல்லா, நண்பரிடம் இனிமேல் சொத்தை எழுதிவைத்துவிட்டு இறந்துப்போவதற்கு எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் யாரும் இல்லை என்பதை நினைத்து விட்டு அழுதுக்கிட்டு இருக்கேன் என்றார். முல்லா சொன்னதைக்கேட்ட நண்பர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
நீதி:- பிறர் நமக்கு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும்.