THE IMPORTANCE OF CHILDREN’S THINKING
உங்கள் சிறுவர்களை அவர்களுக்குத் தேவையானவற்றை தேர்ந்து எடுத்துக்கொள்ளவும், தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தவும் அனுமதியுங்கள். இவ்வாறு செய்வது, அவர்களுடைய விருப்பங்கள் மற்றும் தெரியப்படுத்த விரும்புகிறவற்றை பேசுவதற்கு துணை செய்யும்.
‘ஒன்றை நீ முடிவு செய்யகூடாது. ஏனென்றால், உனக்கு வயசு போதாது அல்லது பெரியவர்களுக்கு எல்லாம் தெரியும்’ அன்றாட வாழ்க்கையில் நாம் அடிக்கடி கேட்ககூடிய வார்த்தைகள் தான் இவை. உண்மையைச் சொல்வது என்றால் இவை போன்றவற்றைக் கேட்பது இனிமையான ஒன்றாக இருக்க வாய்ப்பு இல்லை. உதாரணத்துக்கு, உங்கள் குழந்தை தவறு இழைத்தல் என்பது ஒன்றும் மோசமான செயல் அல்ல.
எந்த ஒரு குழந்தையின் கருத்து அடிக்கடி நிராகரிக்கப்படுகிறதோ அக்குழந்தை ஒருவிதமான பாதுகாப்பு அற்ற சூழலிலே வளரக்கூடும். உண்மையிலேயே, இது சரியான உணர்வைத் தோற்றுவிக்கும். உங்களுக்காக வேறொருவர் எல்லா முடிவுகளையும் மேற்கொள்ளும்போது, வாழ்க்கையிடம் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை உங்களால் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
உங்கள் குழந்தையை அவர்களுக்குத் தேவையானவற்றை தேர்ந்து எடுத்துக்கொள்ளவும், தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தவும் அனுமதியுங்கள். இவ்வாறு செய்வது, அவர்களுடைய விருப்பங்கள் மற்றும் தெரியப்படுத்த விரும்புகிறவற்றை பேசுவதற்கு துணை செய்யும்.அவர்களின் சுதந்திரத்திற்கு போதியளவு இடமளியுங்கள். அவர்கள் எதிர்காலத்தை துணிவுடன் எதிர்கொள்ள நீங்களே காரணமாக இருங்கள்.
மகிழ்ச்சியாக வைக்க மறுத்தல்
இதுபோன்ற செயல்களால் அவர்களின் கல்வி உயர்ந்திடப் போவதில்லை.குழந்தைப் பருவத்தின் இனிமையான நினைவுகள் மிகவும் மதிக்க தகுந்தவையாகும். அவற்றை யாராலும் நம்மிடம் இருந்து ஒருபோதும் எளிதாகப் பிரித்துவிட முடியாது.
இன்னும் ஒருபடி மேலாக, சின்னசின்ன விடுமுறை காலங்கள் பின்னாளில், பெரிய நிறைவேறுதல்களாக உருமாற்றம் பெறுகின்றன. ஒரு குழந்தை ஆரோக்கியமான சூழலில் வளரும்பட்சத்தில், எண்ணற்ற புதிய அனுபவங்களைப் பெறுகின்றது. இது அவர்கள் விரைவாக வளர்வதைக் காட்டுகின்றது. மகிழ்ச்சி நிறைந்த குழந்தை எளிதாக வாலிபப் பருவத்தினை ஏற்றுக் கொள்வதோடு, புதிய வாழ்க்கையையும் தொடங்குகின்றது.
உண்மை என்னவென்றால் நீங்கள் ஒரு பெற்றோராக மற்றவர்கள் கூறுவதைவிட எது குழந்தைக்கு நல்லது? எது கெட்டது? என்பது உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். மற்றவர்கள் கூறுகிற அறிவுரையை நீங்கள் கேட்கலாமே தவிர அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்ற அர்த்தம் இல்லை.
நீங்கள் தான் உங்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டி என்பதை எந்த நிலையிலும் மறவாதீர்கள் அதுவே உங்கள் குழந்தைகளை வளர உதவும்
தனிமைப்படுத்துதல்
இதுதற்காலத்தில் அனைத்து குடும்பத்திலும் இருக்கும் பெரிய பிரச்னை ஆகும்.நமக்கு முக்கியத்துவம் இல்லாமல் தெரிகிற விஷயங்கள், குழந்தைகளுக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகத் தெரியலாம். அனைத்து மக்களுக்கும், குறிப்பாக, மழலைகளுக்குச் சிலராவது, அவர்களிடம் விழாக்காலங்களில் அன்பாக அரவணைப்பாக இருக்க வேண்டும் என்பது தேவையாக உள்ளது.
ஆனால் இன்றைய காலத்தில் யாருக்குமே நேரம் இருப்பதில்லை. இதனால் சிறுவர்கள் தங்களின் அரவணைபிற்காக ஏங்குகின்றார்கள். இதனை பல பெற்றோர் புரிந்து கொள்வதில்லை.
உங்கள் குழந்தையின் பிறந்த நாள் விழாவில், பங்கேற்காமல் இருக்க சரியான காரணம் இருந்தாலும், அவ்வாறு நடக்க முயற்சி செய்யாதீர்கள். ஏனென்றால், எதிர்காலத்தில் எவ்வளவு முக்கியமான தருணத்தை இழந்து விட்டீர்கள் என்பதை உணர்ந்து, அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை உண்டாகும்.
குழந்தைகளுடன் சேர்ந்து விழாக்காலத்தில் வீட்டினை அலங்கரிக்கவும், சினிமாவிற்குப் போகவும், பாட்டியுடன் ஒன்றாக இருக்கவும் நேஇரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள். ஏனென்றால் வாழ்வில் இவையெல்லாம் முக்கிய மணித்துளிகள். மழலைகள் வளரும்பட்சத்தில், இவற்றை நீங்கள் இழக்க நேரிடும்.
குழந்தைகளுக்கு கடைகளில் பொருள்கள் வாங்கும்போது கணக்குப் பார்த்து, விலையை விசாரித்து, பிற கடைகளில் ஒப்பிட்டுப்பார்த்து வாங்க வேண்டும் என்பதை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அதை விடுத்து இது வாங்க முடியாது, பணம் வரும் போது பார்க்கலாம் என உடனே அவர்களின் மனதை உடைத்து விடக்கூடாது.
நாம் நமது குழந்தைகளை மருத்துவராக்க வேண்டும் என்றும், பொறியாளர் ஆக்க வேண்டும் என்றும், கலெக்டர் ஆக்க வேண்டும் என்றும் கடினமாக உழைக்கச் சொல்கிறோம். ஆனால் நாம் நமது பிள்ளைகளுக்கு நிதியைக் கையாள்வது குறித்தும், நிதி மேலாண்மை குறித்தும் இதுவரை சொல்லிக் கொடுத்தது இல்லை. பொருளை ஈட்ட வேண்டும் எனில் நல்லதொரு பணியையோ, தொழிலையோ தேட வேண்டும்.
நல்ல ஒரு பணியைப் பெறுவதற்கு நமது தகுதியை வளர்க்கும் கல்வி வேண்டும். ஆனால் செல்வம் என்ற ஒன்றை நோக்கித்தான் நாம் அனைவருமே இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. இன்றைய இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் பணத்தின் அருமை தெரிவதில்லை. பணத்தைச் செலவழிக்கும் விதமும் தெரியவில்லை. கடையில் பணம் கொடுத்து பொருள்கள் வாங்கிய பின்னர், தாங்கள் கொடுத்த பணத்தின் மீதம் எவ்வளவு பெறப்பட்டுள்ளது என்பதை எத்தனை நபர்கள் கணக்கிட்டுச் சரிபார்க்கின்றனர்.
குழந்தைகளுக்கு கடைகளில் பொருள்கள் வாங்கும்போது கணக்குப் பார்த்து, விலையை விசாரித்து, பிற கடைகளில் ஒப்பிட்டுப்பார்த்து வாங்க வேண்டும் என்பதை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதில்லை. எந்தவொரு செலவு செய்வதற்கு முன்னும் அந்த செலவு அவசியம்தானா என்பதைப் பகுத்தாய்வதற்கு அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அந்தச் செலவு செய்வதற்குப் பதிலாக அதற்கான பலனை வேறு குறைவான செலவுகளில் பெறுவதற்குண்டான வழிகளைக் கற்றுத் தரவேண்டும். அவர்களுக்குச் சிந்திக்கும் தன்மையையும், மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்கும் தன்மையையும் பயிற்றுவிக்க வேண்டும்.
தேவையற்ற செலவுகளை எந்நாளும் ஊக்கப்படுத்தாதீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு அன்றாடம் பணத்தைக் கொடுத்து பழக்கப்படுத்துவதை விட, ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் செலவுக்காக வழங்கினால், அது அவர்களிடையே ஒரு திட்டமிடுதலை ஏற்படுத்தும். மேலும், செய்கின்ற செலவுகளை எழுதி வைக்கச் சொல்லுங்கள், அது மட்டுமல்ல அதனை கடந்த மாதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லுங்கள்.அதன் மூலம் கூடுதலாகச் செய்த செலவுகளும், அனாவசியமாகச் செய்த செலவுகளும் தெரிய வரும். அதனைத் தவிர்ப்பதற்கு அவர்களுக்கு அது மிகப் பெரிய உதவியாக இருக்கும். இந்த பழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் ஒரு சிறப்பான, திட்டமிட்ட வாழ்க்கை வாழ அது வழி வகுக்கும்.
எனவே உங்கள் சிறுவர்களின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் விலை மதிப்பற்றவை. அவர்களை உங்களின் கருத்துக்களுக்குள் திணிக்காதீர்கள் . அவர்களின் அறிவுக்கு எட்டிய வகையில் அவர்களது கருத்துகளின் பிழைகளை சுட்டிக் காட்டுங்கள். அதுவும் தண்டனை இல்லாமல் இருக்கட்டும். அதுவே அவர்களின் மகிழ்வான நாட்களை உருவாக்கி விடும்.