இன்று சேமிப்பு என்பது மிகவும் முக்கியமாக உள்ளது. விலை ஏற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் உடல் உழைப்பு குறைந்து, தேவைகள் மற்றும் மருத்துவ செலவுகள் அதிகரித்து, உறவுகளின் நெருக்கமும், உதவிகளும் குறைந்ததுடன் அரசு வேலைகள் , சீதனம் என்பனவற்றை நம்பி வாழ்வைத்து ஒவ்வொருவரையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கன..
முன்பெல்லாம் சேமிக்கும் பழக்கம் இயற்கையிலேயே ஒவ்வொரு குடும்பத்திடமும் வழக்கில் இருந்தது . அறுவடை செய்யும் நெல் மற்றும்
நிலத்தில் விளையும் தானியங்களை, உணவுக்கு வேண்டும் என அவற்றின் ஒருபகுதியை சேமிப்பாக சேகரித்து வைத்தனர்.குடும்ப பெண்கள் தான் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில், அரிசியில் ஒவ்வொரு நாளும் சிறிது, சிறிதாக சேர்த்தனர். பால், தயிர்,மோர், நெய் என விற்று சேர்த்தனர். இவ்வாறு சேமிக்கும் பணத்தை அவசர கால தேவை மற்றும் விழா கொண்டாட்டங்களின்போது பயன்படுத்துவர்.
வீட்டிலுள்ள பெரியோர் சிறுவர்களுக்கு, மண் உண்டியல்கள் வாங்கி சேமிக்கவும் அவர்களுக்கு தின்பண்டல்கள் வாங்க தரும் பணம், உண்டியல்களில் போட்டு வைக்கும்படி கூறி அவர்களிடம் சேமிக்கும் பழக்கத்தை கற்றுத்தந்தனர். பெரியவர்களும் உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். .பெண்கள் தங்கள் சேமிப்பு பணத்தை பெருக்குவதற்கு, கோழி மற்றும் ஆடு, மாடுகளை வளர்க்கவும் விற்கவும் ஆரம்பித்தனர். பூ மற்றும் காய்கறி, பலகாரங்கள் தயாரித்து விற்றனர். தானியங்கள் வாங்கி வைத்து விற்பனை செய்தனர். பசுவளர்த்து பால்கறந்து விற்றனர். இவற்றில் ஒரு பகுதி சேமிக்கும் பழக்கத்தை கொண்டனர் . சில வீடுகளில் பெண்கள் ஒரு பொருள் வாங்க வேண்டுமென கூறி கணவனுக்கு இருந்து பணத்தை வாங்கி அதை சேமிப்பாக வைத்திருப்பர். குடும்பத்திற்கு அல்லது கணவருக்கு
பொருளாதார சிக்கல்கள் வரும்போது அந்த பணத்தை கொடுத்து உதவுவார்கள்
பொதுவாக சேமிப்பதில் ஒவ்வொருவருக்கின்போதும் போட்டி இருந்தது. இதனால் பணம் விரைய
மாகாமல் ஒவ்வொருவரின் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டது. பல மாணவர்கள் இந்த சேமிப்பு பணத்தின் மூலம் உயர் படிப்பை தொடரவும், சிறந்த வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர் .அன்றைய மக்களுக்கு ‘சேமி அவசியம் ‘ என்ற எண்ணம் இயற்கயாகவே
இருந்ததால் அவர்களிடம் கெட்ட பழக்கவழக்கங்கள் காணப்பவில்லை . இதனால் தாங்கள் சேமித்து பணத்தை கொண்டு காணி , பொருட்கள் என்று எதையாவது மென் மேலும் வாங்கி சேர்த்து கொண்டிருந்தனர். இப்படி சேமித்து வைப்பதால் அவசர நேரங்களில் வட்டி கடன் வாங்க வேண்டிய அவசியமற்றதாக காணப்பட்டது.
தற்க்காலத்தில் ஆடம்பரங்களும், அனாவசிய செலவும் அதிகரித்து காணப்படுகின்றன . உழைக்கும் பணத்தையோ செலவழிக்கவே மக்கள் சிந்திக்கின்றனர் . எவ்வளவு உழைத்தாலும் பற்றாக்குறை வாழ்க்கையைதான் வாழ்கின்றனர் . ‘இருக்கும் வரை அனுபவிக்கப்போம் என்ற சிந்தனியே அதிகரித்து விட்டது இதன் காரணமாகவே கடன்கள் பெருகி வாழ்க்கையினுடைய உண்மையான சந்தோசம் இலக்கப்படுகின்றது .சினிமா மோகங்களும், வீண் ஆடம்பரங்களும் மக்களை சேமித்து விடாமல் சிறுகடன் பெரிய முதல் தொகை கடன்கள் என்பவற்றில் சிக்கப்படுகின்றனர் . பந்தம், பாசம், கடமை என்ற உணர்வுகள் மறந்துபோன நிலையில் ‘எங்கள் முதுமை காலத்தில் எங்களை காக்கும் நிழல் மரமாக நிற்க எங்கள் சேமிப்பால் மட்டுமே முடியும்.’ எமது சமூகத்தினர் சிறுவயதினில் இருந்தே பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது உண்மையே.
இதே போல சேமிப்பையும் ஒரு செலவாக கருதி
நடந்துகொள்ள வேண்டும் .
வங்கியில் சேமிப்பை நாடுவதே சிறந்ததாக கருதப்படுகின்றது வீட்டில் மொத்தமாக பணத்தை வைத்திருந்து எந்தக் காரியத்தையும் செயற்படுத்த போதிய பாதுகாப்பும் இல்லை.இப்போது வட்டியற்ற பணத்தை வீட்டில் பயத்துடன் விழித்து கொண்டிருக்கும்தைவிட, வட்டி குறைவாக இருந்தாலும் பாதுகாப்புடன் சேமிப்பு சேமிக்கும் வங்கிகளையே நாடிச்செல்வது சிறந்தது.