Tuesday, February 4, 2025
Homeசிறுவர் செய்திகள்7 மாடி கட்டிடம் இடிந்து கம்போடியாவில் 18 பேர் உயிரிழப்பு

7 மாடி கட்டிடம் இடிந்து கம்போடியாவில் 18 பேர் உயிரிழப்பு

- Advertisement -

கம்போடியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள பிரபல சூதாட்ட நகரமான சிஹானோக்வில்லி பகுதியில் சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் 7 மாடிகளை கொண்ட புதிய கட்டிடத்தை உருவாக்கி வருகிறது.

- Advertisement -

இந்த கட்டிடத்தின் 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று வழக்கம்போல் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒட்டுமொத்த கட்டிடமும் சில நொடிகளில் நொறுங்கி விழுந்து தரைமட்டமானது. இடிபாடுகளுக்குள் சிக்கிய சுமார் 50 தொழிலாளர்களை மீட்க தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர்.

20-க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் 7 பிரேதங்களும் இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் முதல் கட்டமாக செய்தி வெளியிட்டன.
இந்நிலையில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தோர்களில் சிலர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் இன்றைய நிலவரப்படி இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.