1.யோகா – Yoga
தற்காலத்தில் யோகா என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டும் இன்றி அன்றாட வாழ்வில் வயது வேறுபாடின்றி ஒரு முக்கிய செயலாகவே மாற்றி வருகின்றது கட்டாயமாக இவை செய்யப்பட வேண்டும் என வைத்தியர்கள் அறிவுரையும் சிலருக்கும் உண்டு . இவற்ற்றை சிறுவயதினிலே பொழுதுபோக்கான பலக்கமக்கிக்கொல்வது சாலச்சிறந்தது யோகா மூலம் சிறார்கள் சிறுவயதிலிருந்தே தன்னம்பிக்கை, விடா முயற்ச்சி,மனோபலம் ,உடல்பலம் ,தெளிவான சிந்தனை என்பன வளர ஆரம்பிக்கும் .
2.வீட்டுத் தோட்டம் – Home Garden
சிறுவர்களுக்கான பொழுதுபோக்குகளில் மிகவும் சிறந்த ஒன்றாக உலகளாவிய ரீதியில் வீட்டுத்தோட்டம் அமைத்தலும் கொள்ளப்படுகின்றது . அவர்கள் எப்பவும் தங்கள் கைகளில் அழுக்கு பெற விரும்புவார்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடும்போது அவர்கள் விருப்பதுடன் கூடிய ஒன்றவும் விளங்குவதோடு வண்ணமயமான பூக்கள் ,மரக்கறிகள் , பழங்கள்,மரங்கள், செடிகள்,கொடிகள் ,பட்டாம்பூச்சிகள் அவர்களின் மனதை மேன்மையானதாக மாற்றுவதோடு குழு செயற்பாடுகளிலும் சிறந்த ஆளுமைகொண்டவர்களாக உருவாக்கும் மருந்து கலவை அற்ற பயனுள்ள உணவு வகைகளையும் பெற்றுக்கொள்ளலாம் .
3.மீன் பிடித்தல்
பெற்றோருடன் ஓய்வாய் இருந்து நீரோடைகளை இரசித்து மீன் பிடித்தல் மூலம் அவர்களின் பொறுமை , ஆர்வம் , தன்னம்பிக்கை , குறிக்கோள் என்பன அதிகரிக்கும் அத்துடன் சிறந்த நன்னடத்தை உடையவராக மனம் கொண்டவராக மாறுவார்கள்.
4.நாணயங்கள் சேகரித்தல் – Coin Collection
நாணயங்களை சேகரிப்பதன் மூலம் சிறுவர்கள் ஒவ்வொரு நாட்டிட்குமுரிய நாணயங்களின் பெயர்கள் ,பெறுமதி மற்றும் அந்த நாட்டின் கலை ,கலாச்சாரம் ,பண்பாடு ,மொழி ,சமயம் என்பனவற்றை நினைவில் வைப்பதுடன் பணம் சேமிப்பின் முக்கியத்துவத்தினை சிறுவயதினில் இருந்தே வளர ஆரம்பிக்கும் அத்துடன் பகிர்தல் ,கணகிடல் மற்றும் ஒன்றிணைத்தல் தொடர்பான விருத்திகள் மேம்படும்.
5.வரைதல் மற்றும் வர்ணம் திட்டுதல் – Drawing and Painting
சிறுவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்த படங்களை வரைதல் மற்றும் வர்ணம் திட்டுதல் சிறந்த செயல் ஆகும் தங்களை சுதந்திரமாக இருப்பதாக கருதுவார்கள் சிறார்களின் பொதுவான புரிந்துணர்தல் விருத்திக்கு மிகப்பொருத்தமானதாகும் அத்துடன் உயர்ந்த மனோபலத்தையும் உருவாக்குகின்றது.
6.கட்டிட வடிவமைப்பு – Model Building
கட்டிட வடிவமைப்பு தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் அவர்களின் படைப்பாற்றல் அதிகரிப்பதுடன் கனரக வாகனங்கள் மற்றும் பெரிய கட்டிடங்கள் விமானங்கள் என்பனவற்றை தயாரிக்க முற்படுவதனால் புத்தாக்க நடவடிக்கைகள் மற்றும் தொலைநோக்குடனான் உயர்ந்த மற்றும் கணித விரைவுகனித சிந்தனைகள் மேம்படும்.
7.இசை -Music
இசை கருவிகள் செயற்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும் இச்செயற்பாடு அவர்களின் திறமை ஆளுமை,தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும் இசை என்பது தனி நபரை அமைதிபடுத்தும் தன்மை கொண்டது இச்செயற்பாட்டின் மூலம் குழந்தைகள் உற்சாகமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருப்பதனால் பிறரினால் எளிதில் கவரப்படுவர் .
8.முத்திரை சேகரித்தல் – Stamp Collection
சிறுவர்களின் கூட்டு திறனையும் மற்றும் நினைவாற்றலையும் மேம்படுத்துவதில் முத்திரை சேகரிப்பு சிறப்பானது சிறார்களின் பொதுவான புவியியல் தொடர்பான அறிவை பெறவும் சில நாடுகளின் சின்னங்கள் ,வர்ணங்கள்,கலாச்சாரம் ,வெற்றி ,வரலாறு ,நாட்டின் புராதன பெயர்கள் என்பனவட்ட்ரை நினைவில் வைத்துக்கொள்ள மற்றும் தூரநோக்கு சிந்தனைகளை வளர்க்கவும் உதவுகின்றது
9.சமைத்தல் – Cooking
பெற்றோருடன் சேர்ந்து சமையல் செய்தல் ஒரு புதிய வினைத்திறனாக கொள்ளப்படுகின்றது
இச்செயற்பாட்டின் போது அவர்கள் தனித்துவம் ,சுத்தம் ,வினைத்திறன் ,மருத்துவகுணம் ,பொறுமை,நிதானம், பங்கிடல் தொடர்பான அறிவினை மேம்படுத்துவதோடு மிகவும் சிறந்த உணவு பழக்கவழக்கத்தையும் கற்றுக்கொள்கின்றனர் அத்துடன் உணவு வகைகள் சத்துக்கள் என்பன அதிகளவில் அவர்களின் நினைவில் கொள்ளப்படும்.
10.கைவேலைகள் (கழிவு மீள் சுழற்சிக்கு உட்படுத்துதல்) – handiwork (Recycle items)
கழிவுப்பொருட்களை மீள் சுழற்சிக்கு புதிய முறைக்கு கண்டு பிடித்து உற்பத்தி செய்வதன் மூலம் உச்சபயன்பட்டை அடையலாம் இவ்வாறு கழிவுப்பொருட்களை சேகரித்து புதிய பயன்களை பெறுவதன்மூலம் சிறார்களின் மூளை விருத்தியடைதல் ,கண்டுபிடிப்பிடிப்புக்கள் ,தன்னம்பிக்கை ,பொருட்களின் முக்கியத்துவம் , என்பவற்றுடன் தன்னார்வத்தையும் அதிகரிக்க செய்யும் .