இணையத்தின் விளைவுகள்
இணையம் என்பது உலக அளவில் பல கணினி வலையமைப்புகளின் கூட்டிணைப்பான பெரும் வலையமைப்பைக் குறிப்பதாகும். இந்த இணையம் மனிதர்களின் உற்றத் தோழனாக மாறிவிட்டதை யாராலும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. இந்நவீன உலகில் பாலமாய் இருப்பது இணையமே ஆகும் என்றால் மிகையாகாது. அந்த இணையத்தின் ஆணிவேராக இயங்கும் பெரும்பாலான அடிப்படைத் தொழில்நுட்பங்களைப் புழங்குவது பற்றி இங்கு குறிப்பிட வேண்டும்.
மின்னஞ்சல் (email), வலைத்தளங்கள் (web pages), வலைப்பூக்கள் (blogs), தேடுபொறிகள் (searchengines), வலைக்கூடங்கள் அல்லது சமூக வலைத்தளங்கள் (social network such as Twitter, Facebook, LinkedIn),வலைத்திரைகள் (video sharing services such as You-Tube), மின்னாட்சி (e-governance), மின்வணிகம் (e-Commerce), வலையூடகங்கள் ( web versions of electronic media), மின் தரவுத்தளங்கள் (online encyclopedia such as Wikipedia), மின்கலைக்கூடங்கள் (electronic art galleries), இணையக் கல்விக்கூடங்கள் (web based learning, e-learning) என்பவை இவற்றில் அடங்கும்.
ஆக கல்வி, தொழிற்துறை, விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொருளாதரம், சமூகம் என அனைத்து துறைகளிலும் இந்த இணையத்தின் ‘மாயமும் மகிமையும்’ தேவைப்படுகிறது. இதற்கு முக்கிய சான்று வெளிநாடுகளில் அரசால் அறிமுகப்படுத்திய கல்வி முறை ஆகும்.
தற்போது, இனையத்தின் வழி மாணவர்கள் இல்லத்தில் இருந்தவாறே, பாடத்தை ஒட்டிக் கலந்துரையாடலோ, கருத்துப்பரிமாற்றமோ செய்யலாம். இவ்வாறு கற்க முயலும் மாணவர்கள் கல்வியில் வைரமாய் பிரகாசிப்பர் என்பது திண்ணமாகும்.
இதுமட்டுமின்றி, இணையத்தின் உதவியால் பல மருத்துவ சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன. பல நாடுகளில் மருத்துவ வல்லுனர்கள் இந்த முறையை கையாளுகின்றனர். இதற்குச் சான்று அண்மையில் இங்கிலாந்து நாட்டில் இணையத்தின் வழி பிரசவம் நடைப்பெற்றதைக் குறிக்கலாம் மேலும், ‘இன்டெர்நெட்’ எனப்படும் இணையத்தின் வரவு நம் அன்றாட வாழ்க்கையில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
விரல் நுனியில் தகவல்கள், செய்திகள், புள்ளிவிவரங்கள்; விரல் சொடுக்கும் நேரத்தில் தகவல், செய்திப் பரிமாற்றம், தரவிறக்கம்: பதிவேற்றம்; பூமிக் கோளத்தில் நாடுகளின் எல்லைகள் மறைந்துபோய் ‘எல்லையில்லா உலக’ உருவாக்கம்; தொலைவு என்பது மறைந்து போய், உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிப்போன அதிசயம்! அதற்கு முக்கியச் சான்று எம்.எச் 17, ஏர் ஆசியா விமானம் கண்டுப்பிடிக்க இந்த இணையத்தின் பயன்பாட்டினை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
தொடர்ந்து, இணையத்தின் ஆதிக்கம் மக்களின் அன்றாட வாழ்விலும் மேலோங்கியே நிற்கின்றது. இன்றைய பரபரப்பான வாழ்வில் மக்கள் நேரத்தை சிக்கனப்படுத்துவதிலும், வேலைகளை எளிமையாக;விரைவாக முடிப்பதிலும் குறியாக இருக்கின்றனர். அந்த வகையில், கட்டணங்களை செலுத்துவது, பொருள்கள் வாங்குவது, வேலைக்கு மனு செய்வது, மற்றவருடன் தொடர்பு கொள்வது என அத்துனை வேலைகளையும் விரல் சொடுகும் நொடியில் முடித்து விடலாம்.
இந்த நேரத்தில் காலதேவனின் தேவை அதிகம் நமக்குத் தேவையில்லையே எனலாம். மேலும், அடையாள அட்டை, கடைப்பிதழ் அட்டை, வங்கி அட்டை என ஒவ்வொரு மனிதனின் முக்கிய பத்திரங்கள் மற்றும் அட்டைகள் செய்ய இணையம் மிக அவசியம்.
இப்படி பல நன்மைகளை வாரி வழங்கும் பாரி வள்ளலான இணையத்தினால் கெடுதல்களும் விளைகின்றன என்பதை ஒப்புக் கொள்ளதான் வேண்டும். இணையத்தின் மிகப் பெரும் சிக்கலே நம்பகத்தன்மை இன்மதான். சொல்வதைச் சரியாகப் பிழையில்லாமல் சொல்வது மட்டுமல்லாமல் தக்க சான்றுகளையும் காட்ட வேண்டும். இணையத்தில் கிடைக்கும் பெரும்பாலான செய்திகளை நாம் “கண்னால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்ற பார்வையில்தான் அணுக வேண்டும்.
இன்னும் சொல்லப் போனால் இந்த நூற்றாண்டில் உலகளாவிய முறையில் எங்கெல்லாம் மனித சஞ்சாரம் இருக்குமோ அங்கெல்லாம் இலத்திரனியல் / மின்னனுவியல் (electronics) தகவல் சாதனங்கள் காணப்படுகின்றன.
தகவல் உச்சமமான தற்போதைய தசாப்தத்தில் தொழிநுட்ப முன்னேற்றங்கள் எவ்வாறு எமது அன்றாட வாழ்க்கையில் பலனையும், பாதகங்களையும் உண்டாக்கலாம் என ஒரு சில நிமிடங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது எமது குடும்பத்திற்கும் உடல் மற்றும் உள நலத்திற்குப் பயனாகவும், மன நிம்மதியைத் தரவும் வழிவகுக்கும்.
எம்மில்லங்களில் வளரும் பிள்ளைகளில் பெரும்பாலானோர் பாலகர்களாக இருக்கையிலேயே ஓடுபட கணனி விளையாட்டுக்கள் (video games), இசைப்பெட்டிகள் (iPods), இலத்திரனியல் சுவடிகள் (Tablets), பலகைகள் (IPads), மற்றும் பல்வேறு இணையதள உபகரணங்கள் Web Appliance என பல்வேறு சாதனங்களைச் சர்வசாதாரணமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இவற்றில் வளரும் பிள்ளைகளிடம், சமூகவலைகள், குறிப்பாக FaceBook (முகநூல்) பெரும் செல்வாக்கை வகிக்கின்றது. இது இலத்திரனியல் தகவல் நூற்றாண்டில் பிறக்காத பெற்றார்களுக்கு சில சமயம் தர்ம சங்கடமான விடயம்.
Facebook– முகநூல், சமூகவலைச் சாதனங்கள், தற்போது கணினி, கைப்பேசி பயன்படுத்தத் தெரிந்த பருவத்திற்கு வராத பிள்ளைகளில் இருந்து வயோதிபர் வரை அனைவரையும் ஈர்க்கும் ஒரு தகவல் பரிமாற்று தளமாக இருந்து வருகிறது. நம் வீடுகளில் இடைநிலை பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளும்,பெற்றோரும் கைப்பேசி வைத்திருப்பதும், பாவிப்பதும் சுய பயன்பாட்டு உரிமையென பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.
இத்தருணத்தில் சமூகவலைகளின் நன்மை, தீமைகளை அதைப் பயன்படுத்தும் அனைவரும் அறிந்திருப்பது அவசியம்.
நன்மைகள்
- சமூகஈடுபாடு–Facebook போன்ற சமூகவலைகள் நிச்சயமாக பிள்ளைகளுக்குத் தமது நண்பர்களுடன் தொடர்பை வைத்திருக்கவும், மேலும் புதிய நட்புகளை உண்டு பண்ணவும் இன்னொரு மார்க்கமாக உதவுகிறது. சரியான முறையில் இது பாவிக்கப்பட்டால் இயல்பான, நேரடி அறிமுகங்கள் போன்று இதுவும் பிள்ளைகளுக்குத் ஒரு நல்ல சுற்றத்தை அமைத்து தரும்.
- சுயஅபிப்பிராயங்கள்–சமூகவலைஅனைவருக்கும்தமதுசுயஅபிப்பிராயங்களைத்தெரிவிக்கஉறுதுணைவகிக்கும். உதாரணமாகத்தமக்கெனஇணையப்பக்கம்அமைக்கவும், அதில் தமது மன கருத்துக்களை தமது நண்பர்களுடனும், உலகத்தாருடனும் மனத்திடமாகப் பகிர உதவும்.
- மின்னியல் தகவல் உபயோகத்திறன் – பிள்ளைகள் என்றாலும் சரி, பெரியவர்கள் என்றாலும் சரி எவ்வாறு உடன்கருத்துப் பரிமாறல் செய்யலாம், தகவல் ஆராயலாம், திரட்டிப் பாவிக்கலாம் என்ற இக்கால அத்தியாவசியத் திறன்களைப் பெற வாய்ப்பளிக்கிறது. இதன் காரணமாகப் பிள்ளைகள் சுயமாக எழுத, படம் எடுத்துப் பரிமாற, கானொளி எடுத்துக்கதை சொல்ல, மின்வலையில் தகவல் தேடும் திறன்களைப் பயில வழிவகுக்கிறது.
- கல்வி மேம்பாடு – மின் இணைவு தளம், சமூகவியல் வலைகள் சிறந்த அறிவுக் களஞ்சியங்கள் ஆகும். புதிய அறிவைப்பெற, கல்வி சம்பந்தமான அறிவைப் பெற, கேள்வி பதில்களை உடனுக்குடன் பரிமாற, சமூகவியல் வலை சிறப்பான சாதனமாகும்.
தீமைகள்
- நம்பகத்தன்மை–இதுப்போன்றபொதுவலைத்தலங்களில்யார்வேண்டுமானலும்தமதுகருத்துக்களைவெளிப்படுத்தமுடியும். ஆகையால்இத்தகவல்கள்உண்மையானதகவலாகஇருக்கவேண்டும்என்பதுஅவசியமில்லை. திசை திருப்பும் தகவல்களை ரசிக்கும் வகையில் கொடுத்து வாசிப்பவர்களை மூளைச் சலவை செய்யும் நபர்களும் உண்டு.
- கொடியவர்களின்கைவேலை–Facebookபோன்ற சமூகவலையில் வரையறையின்றி யாரும் யாரிடமும் தொடர்பு கொள்ளலாம். குறிப்பாகப் பிள்ளைகள் பெற்றார், சுற்றார் மூலமே இயல்பாக சமூகவரையறைகளைப் பெறுவர்.
ஆயினும் Facebookபோன்ற சாதனங்களில் சிலர் தமது கொடிமைத்தனத்தை நேரடியாகவும், அனாமதேயமாகவும் காட்ட வழிவகுக்கும். ஒருத்தருக்கு ஒருவர் அல்லது ஒரு குழுவாகப் பிள்ளைகளை உளவியல் ரீதியில் தாக்கவும் வழியுண்டு. குறிப்பாக மற்றப் பிள்ளைகள் தொடர்பு சாதனங்கள் ஊடாக நயவஞ்சகம் செய்தால் இதைப் பெற்றோரினால் தடுக்க முடியாது.
- கட்டுப்பாடின்மை – Facebookதனித்துவமான ஒரு கட்டமைப்பு அல்ல, இது சிறிது சிறிதாகச் சிறார்களை ஆழ்ந்த கடல்போன்ற கட்டற்ற மின்வலைக்கு எடுத்துச் செல்ல மிகுதியான வாய்ப்புக்கள் உண்டு.
பிள்ளைகள் மின் வலயத்திற்குத் தாமாகவே செல்ல வயது குறைந்தவர்கள் எனப் பெற்றோர் நினைத்தால், சமூகவலை உபயோகத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். குறிப்பாகத் தகாத தொடர்புகளை பிள்ளைகள் பெறாமால் காக்க வேண்டும்.
- அவதானம்தேவை – பிள்ளைகள் உடன் தொடர்பு கொள்வது அவர்கட்கும் குடும்பத்திற்குத் தெரிந்தவர்காளாக இருப்பினும், சமூகவலைகள் நண்பர்களிள் நண்பர்களை நம்பக்கூடிய நபர்களாகத் தாமாகவே இணைத்துவிடும். இது Facebookபோன்ற சமுகவலயங்கள் தமது வர்த்தக ஆதாயங்களிற்காகச் செய்யும் ஒரு கைவேலை. ஆயினும் இவ்வாறு தெரியாதவர்களைத் தொடுப்பது பிள்ளைகள் அறியாமல் வயதிற்கு ஏற்காத விடயங்களை எதிர்கொள்ளவும் வழிவகுக்கலாம்.
எனவே Facebookபோன்ற சமூகவலய தளங்களை பெற்றோர்கள், பிள்ளைகள் ஒன்றாகக்கூடிச் சிந்தித்து உள, உடல் ஆரோக்கியத்தையும் பேணும் வகையில் கையாளுதல் நன்மையே.
இன்றைய காலத்தில் இணையத்தில் யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதுவதால் உண்மை எது, பொய் எது என்று புரியாமல் தடுமாறுகிறோம். அதனால், பல வகைகளில் தனி மனிதருக்கும் மற்றும் ஒரு நாட்டிற்கும் பிரச்சணைகள் வந்துக் கொண்டிருப்பதை கண்கூடாக காண முடிகிறது. இதற்கு தக்கச்சான்று, வாத்ஸஆப், முகப்புத்தகம் இன்னும் பல. தொடர்ந்து, இணையத்தில் வன்முறை சம்பவங்கள் அளவுக்கு அதிகமாக பெருகெடுத்து வருகின்றன.
மின்னியல் திருடர்கள்(Hackers), இணையம் மூலம் வங்கிக் கொள்ளை, நாட்டின் ரகசியங்களத் திருடுதல், இணையம் மூலம் வைரஸ் பரப்புதல் என தீய வழிகளிலும் தன் செல்வாக்கை வளர்த்துள்ளது இணையம். இதற்கு தக்க சான்று, நம் நாட்டின் வலையகம் இணைய hackerமுடக்கப்பட்டது. அவையோரே, கத்தியின் கூர்மையை பழம் நறுக்கவும் பயன்படுத்தப்படுகிறது; ஒருவரை காயம் விளைவிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
ஆக இது கத்தியின் தவறு இல்லை, அதனைப் பயன்படுத்துவோரின் கையில் உள்ளது. ஆகவே கற்றறிந்த மானிடராகிய நாம் அன்னப் பறவையாய் உருமாறி இணையத்திலிருந்து நல்லதைப் பருகி அல்லதை ஒதுக்கி பயன் அடைவோம் என்று கூறி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்.