Sunday, January 19, 2025
Homeகல்விபாடல்சிறுவர் கிராமத்து பாடல்

சிறுவர் கிராமத்து பாடல்

- Advertisement -

எறும்பு
சின்னசின்னஎறும்பே
சிங்காரசிற்றெறும்பே!

- Advertisement -

உன்னைப் போல் நானும்
உழைத்திடவேவேணுமெ

ஒன்றன் பின்னேஒன்றாய்
ஊர்ந்துப்போவீர் நன்றாய்!

- Advertisement -

நுன்றய் உம்மைக் கண்டே
நுடந்தால் நன்மைஉண்டே!

- Advertisement -

ஊஞ்சல்
ஆல மரத்து ஊஞ்சலாம்
அமர்ந்து ஆடிப் பாடலதம்
காலை உயர நீட்டியே
கீழும் மேலும் ஆடலாம்.

விண்ணை நோக்கிப் போகலாம்
வடக்கு தெற்குப் பார்க்கலாம்
பண் இசைத்துப் பாடலம்
பகல் முழுதும் ஆடலாம்.

பழக்கமில்லாப் பிள்ளைகள்
பையப் பைய ஆடலாம்
பழக்கமான போதிலேஇ
பறந்து விண்ணில் ஆடலாம்.

 

மழை வருது
மழை வருது மழை வருது
நெல்லு குத்துங்க

முக்காப்பிடி அரிசிபோட்டு
முறுக்கு சுடுங்க

தேடி வரும் மாப்பிள்ளைக்கு
எடுத்து வையூங்க

சும்மா வரும் மாப்பிளைக்கு
சூடு வையூங்க.

அப்பம்
அம்மா சுட்ட அப்பம் – மிக
அருமையான அப்பம்இ
சும்மா சொல்ல வில்லை – தேன்
சேர்த்த சுவை அப்பம்.

ஒன்று தின்ற தங்கை – இன்னும்
ஒன்று கேட்டு அழுவால்இ
நன்று சொல்லி – அம்மா

 

நாலு அப்பம் தந்தால்.

அன்னை அன்பைச் செல்லி – தங்கை
ஆடிப்பாடி நின்றால்இ
என்ன சொன்னா போதும் – அவள்
எங்கள் அன்னை தானே.
-சாரணாகையும்-

நல்ல நாயக்குட்டி
சின்னச் சின்ன நாய்குட்டி
தூயவெள்ளை நாய்க்குட்டி

பஞ்சுப்பொதி நாய்க்குட்டி
பன்னும் தின்னும் நாய்க்குட்டி

சின்னச் சின்ன குழந்தைகள்
கொஞ்சி மகிழும் நாய்க்குட்டி

உன்னைக் கண்டால் பிஞ்சுகள்
நெஞ்சம் மகிழ்ச்சி கொள்ளுமே!

துள்ளித் துள்ளி ஓடுவாய்
உன்னை அள்ளி அள்ளித் துக்கலாம்

வாசலிலே மற்றவர் வந்து
நின்றால் போதுமே!
சிங்க கர்ஜனை செய்வாயே!

சிறுவர் விரும்பும் நாய்க்குட்டி
பாலும் ரொட்டியூம் பாந்தமாய்
தந்து விட்டால் போதுமே!

வாலை வாலை ஆட்டியே
வரவேற்பு தருவாயே!

 

காக்கை
கரிய நிறமந்தக்காக்கை – தம்பி
கவனித்துப் பாரதன் போக்கை,
உரிய பொழுதந்க்காலை – எம்மை
எழுப்பும் தொழிலதன் கடமை.

 

கிளி
பச்சை கிளி பேசுது
பறந்து செல்ல அழைக்குது.

சிவந்த நிறச் சொண்டினால்
சின்னப்பழம் தின்னுதுஇ
அவனி யெல்லாம் தனதென்று
ஆடிப்பாடிச் சொல்லுது.

சிறகடிக்க நினைக்குது
சீறும் பூனை பார்க்குது
இறங்கி ஓட நினைக்குது
இரும்புக் கூடு தடுக்குது.

சிந்தனை நொந்து கலங்குது
சிறுமை கண்டு சிரிக்குது
விந்வயான மனிதனின்
விருப்பம் கண்டு ஒதுங்குது.

நாய்க்குட்டி
சின்னச் சின்ன குழந்தைகள்
கொஞ்சி மகிழும் நாய்க்குட்டி

உன்னைக் கண்டால் பிஞ்சுகள்
நெஞ்சம் மகிழ்ச்சி கொள்ளுமே!

துள்ளித் துள்ளி ஓடுவாய்
உன்னை அள்ளி அள்ளித் துக்கலாம்

வாசலிலே மற்றவர் வந்து
நின்றால் போதுமே!
சிங்க கர்ஜனை செய்வாயே!

சிறுவர் விரும்பும் நாய்க்குட்டி
பாலும் ரொட்டியூம் பாந்தமாய்
தந்து விட்டால் போதுமே!

வாலை வாலை ஆட்டியே
வரவேற்பு தருவாயே!

அசைந்தாடு
அசைந்தாடம்மாஅசைந்தாடு
ஆசைக்கிளியேஅசைந்தாடு
இசையோடொன்றாய் அசைந்தாடு
ஈரக்குலையேஅசைந்தாடு

ஊதயநிலாவேஅசைந்தாடு
ஊதும் குழலேஅசைந்தாடு
ஏழலாய் வந்துஅசைந்தாடு
ஏற்றத்தோடுஅசைந்தாடு

ஐயம் விட்டுஅசைந்தாடு
ஒழுக்கம் பேணிஅசைந்தாடு
ஓவிய நூலேஅசைந்தாடு
ஓளவியமின்றிஅசைந்தாடு
-சாரணாகையும்-

ஏனோகோபம்?
அண்ணாஇ அண்ணாஓடிவா
அருமைஅண்ணாஓடிவா
அண்ணாநீயூம் நில்லாமல்
அருகில் கொஞ்சம் ஓடிவா

என்னுடன் ஆடிப்பாடவே
எங்கும் சுற்றிப்எபார்க்கவே
உன்னைநானும் அழைக்கிறேன்
உள்ளம் கொண்டுஓடிவா
.
சின்னவீடுகட்டிடுவோம்
சிறியபொம்மைசெய்திடுவோம்
என்னஅண்ணாநீயங்கே
எழுதிக்கொண்டு இருக்கிறாய்?

தங்கைமனமும் நோகுதே
தயவாய் இங்கேஓடிவா
எங்கே இன்னும் வரவில்லைஇ
ஏனோகோபம் என்மீதே!
-சாரணாகையும்-

தங்கை
தங்கைஎந்தன் தங்கை
தள்ளாடிவரும் தங்கை
தங்கமானதங்கை
தவழ்ந்துவரும் தங்கை

பட்டுச்சட்டைகோட்டு
புரளிசெய்யூம் தங்கை
வட்டநிலவைக்காட்டி
வங்கச் சொல்லும் தங்கை

பாட்டுச் சொல்லித்தந்தால்
பாடிஆடும் தங்கை
பாட்டிமடியில் சென்று,
படுத்துக்கொள்ளும் தங்கை.

அம்மா
அம்மாஅம்மாவருவாளே
அன்பாய் முத்தம் தருவாளே
தும்மும் போது நூற்றென்பாள்
துணைக்குஎன்றும் நானென்பாள்

கட்டிபடபிடித்துஅணைத்தாலும்
காலால் எட்டிஉதைத்தாலும்
சுட்டித்தனங்கள் செய்தாலும்
சொந்தம் நமக்குஅம்மாவே!

 

பூச்செடிகள்நட்டு வைக்கப் போகிறோம்…

அழகுத் தோட்டம் அருகிலே

அம்மாவுடன் நானுமே

குட்டித் தங்கை பாப்பாவும்

குதூகலமாய் நிற்கின்றோம்

வண்ண வண்ணப் பூக்களாய்

வானவில்லின் வர்ணத்தில்

பூத்து இங்கே குலுங்குதே

எங்கள் வீட்டை சுற்றிலும்

பூச்செடிகள் வைக்கவே

பூச்செடியின் நாற்றுகள்

விலை கொடுத்து வாங்கவே

நாங்கள் இங்கு வந்துள்ளோம்

அழகு மலர்கள் நாற்றுடன்மற்றும் பல செடிகளும்

விலை கொடுத்து வாங்கியே வீடு நோக்கி செல்கின்றோம்

அப்பா வேலை முடிந்த பின்

அப்பாவுடன்அனைவரும்

வீட்டைச் சுற்றி தோட்டமிட்டு

பூச்செடிகள் நாட்டுவோம்

இன்னும் கொஞ்ச காலத்தில்

எண்கள் வீட்டை சுற்றியே

வண்ண பூக்கள் பூக்குமே…

 

பட்டம்

சின்ன சின்னப் பட்டமாம்

சிங்காரப் பட்டமாம்

அண்ணன் செய்த பட்டமாம்

அருமையான பட்டமாம்

 

வட்டமான பட்டமாம்

வாலிருக்கும் பட்டமாம்

கிட்ட வராப் பட்டமாம்

காற்றிலாடும் பட்டமாம்

 

பச்சை வண்ணப் பட்டமாம்

பறக்கும் நல்ல பட்டமாம்

அச்சமின்றி காற்றிலே

ஆடும் நல்ல பட்டமாம்

 

உயரப் போகும் பட்டமாம்

ஊசலாடும் பட்டமாம்

துயரமின்றி ஆடுமாம்

துள்ளி வானில் ஆடுமாம்

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.