Saturday, January 18, 2025
Homeகல்விசிறந்த 20 சிறுவர் பாடல்கள்

சிறந்த 20 சிறுவர் பாடல்கள்

- Advertisement -

siruvar padal_சிறுவர் பாடல்

- Advertisement -

1.அன்பை பொழியும் அம்மா

அன்பை பொழியும்
அம்மா தெய்வம்
போற்றி வளர்க்கும்
அப்பா தெய்வம்
அறிவை கொட்டும்
குருவும் தெய்வம்
அம்மா அப்பா குரு
இம்முவரும்
தெய்வம் நம் தெய்வம்

- Advertisement -

2.சின்ன சின்ன கடிகாரம்
சின்ன சின்ன கடிகாரம்
சிறப்பு மிக்க கடிகாரம்
என்றும் எங்கும் நேரத்தை
எடுத்துக்காட்டும் கடிகாரம்
அண்ணன் தம்பி போல் இங்கே
அழகு முட்கள் இரன்டு உண்டு
ஒன்றன் பின்னே ஒன்றாக
ஓடிச்சுற்றி மணி காட்டும்
சின்ன சின்ன கடிகாரம்
சிறப்பு மிக்க கடிகாரம்

- Advertisement -

3.மாடு கத்தும் ஓசை கேள்
மாடு கத்தும் ஓசை கேள்
மா மா என்னுமே
ஆடு கத்தும் ஓசை கேள்
மே மே என்னுமே
பூனை கத்தும் ஓசை கேள்
மியாவ் மியாவ் என்னுமே
காக்கை கத்தும் ஓசை கேள்
கா கா என்னுமே
நாய் குரைக்கும் ஓசை கேள்
லொல் லொல் என்னுமே
நாய் குரைக்கும் ஓசை கேள்
லொல் லொல் என்னுமே

4.குரங்கு நல்ல குரங்கு
குரங்கு நல்ல குரங்கு
குத்தாலத்து குரங்கு
மரத்தின் மீது ஏறும்
மலையின் உச்சி சேறும்
பொட்டுக்கடல பொருக்கும்
பொருளையெல்லாம் எரெக்கும்
குட்டிக்கரணம் போடும்
கும்பை கண்டால் ஆடும்
குட்டிக்கரணம் போடும்
கும்பை கண்டால் ஆடும்
குரங்கு நல்ல குரங்கு
குத்தாலத்து குரங்கு

5.ஒன்று பின்னே இரண்டு
ஒன்று பின்னே இரண்டு
ஓடும் பந்து உருண்டு
மூன்று நாள்கு ஐந்து
உந்து காலால் பந்து
ஆறு ஏழு எட்டு
ஆஹா கையை தட்டு
ஆறு ஏழு எட்டு
ஆஹா கையை தட்டு

6.கூகூ கூகூ ரயில் வண்டி
கூகூ கூகூ ரயில் வண்டி
கூகூ கூகூ ரயில் வண்டி
கூகூ கூகூ ரயில் வண்டி
கூகூ கூகூ ரயில் வண்டி

பச்சை விலக்கை பார்த்தவுடன்
பாய்ந்து செல்லும் புகை வண்டி
பச்சை விலக்கை பார்த்தவுடன்
பாய்ந்து செல்லும் புகை வண்டி
சிவப்பு விலக்கை கண்டவுடன்
உடனே நிற்கும் ரயில் வண்டி
சிவப்பு விலக்கை கண்டவுடன்
உடனே நிற்கும் ரயில் வண்டி
எந்த ஊரும் சென்றிடலாம்
ஏறி நாமும் மகிழ்திடலாம்
எந்த ஊரும் சென்றிடலாம்
ஏறி நாமும் மகிழ்திடலாம்
கூகூ கூகூ ரயில் வண்டி
கூகூ கூகூ ரயில் வண்டி
கூகூ கூகூ ரயில் வண்டி
கூகூ கூகூ ரயில் வண்டி

7.பாட்டு கேட்டு
ஆட்டம் பார்த்து ஆடலாம்
பாட்டு பாடி ஆட்டம் ஆட
பாடசாலை போகலாம்
பாடி ஆடி ஒடலாம்
நாம் பாடி ஆடி ஒடலாம்.

8.பாட்டியம்மா கடையிலே
பாட்டியம்மா கடையிலே
பருப்பு வட சுடையில
காகம் வந்தது இடையில
கௌவிச் சென்றது வாயில
பாட்டியம்மா கடையிலே
பருப்பு வட சுடையில
காகம் வந்தது இடையில
கௌவிச் சென்றது வாயில
நரி அண்ணா வந்தாராம்
பாட்டுப்பாட சொன்னாராம்
நரி அண்ணா வந்தாராம்
பாட்டுப்பாட சொன்னாராம்
வடை கீழ விழுந்ததாம்
நரி துக்கி சென்றதாம்
பாட்டியம்மா கடையிலே
பருப்பு வட சுடையில
காகம் வந்தது இடையில
கௌவிச் சென்றது வாயில

9.தோட்டத்து மண்ணிலே
தோட்டத்து மண்ணிலே
வட்டமான மெத்தையிலே
சொகுசா தூங்குரா
சின்ன அவரை பாப்பா
சொட்டு சொட்டாய் மழை பெய்யூது
தட்டி தட்டி எழுப்புது
விழிச்சி விழிச்சி பாக்குரா
நெலிஞ்சு நெலிஞ்சு வலையூரா
வானம் பார்த்து சிரிக்கிரா
சின்ன அவரை பாப்பா

siruvar padal_சிறுவர் பாடல்

10.கரடி மாமா

குழந்தைகள் கரடி மாமா கரடி மாமா
எங்கே போரிங்க?
கரடி காட்டுப்பக்கம் வீடு இருக்கு
அங்கே போரேன்
குழந்தைகள் கரடி மாமா கரடி மாமா
எங்கே போரிங்க?
கரடி காட்டுப்பக்கம் வீடு இருக்கு
அங்கே போரேன்
குழந்தைகள் கம்பலிச்சட்ட நல்லா இருக்கு
யாரு தந்தாங்க?
கரடி கடவூல் தந்த சொத்துதான்
வேர யாருங்க
குழந்தைகள் கம்பலிச்சட்ட நல்லா இருக்கு
யாரு தந்தாங்க?
கரடி கடவூல் தந்த சொத்துதான்
வேர யாருங்க

11.குட்டித்தம்பி ஆடும் பந்து
குட்டித்தம்பி ஆடும் பந்து
குதித்தது குதித்து ஓடுதே
தட்டி தட்டி ஆடும் பந்து
தண்ணீருக்குள் விழுந்ததே
விழுந்த பந்து மேலே வந்து
மிதந்து மிதந்து வருகுதே
மிதக்கும் பந்தை எடுத்திடவே
அக்கா நீயூம் ஓடிவா
மிதக்கும் பந்தை எடுத்திடவே
அக்கா நீயூம் ஓடிவா

12.மாம்பழமாம் மாம்பழம்
மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேரத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம்
அல்வாப்போல மாம்பழம்
உங்களுக்கும் வேண்டுமா
இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டு தின்னலாம்
பங்கு போட்டு தின்னலாம்

13.பச்சைகிளி பாடும்
பச்சைகிளி பாடும்
பறந்து பறந்து ஓடும்
உச்சிக்கிளையில் ஆடும்
குண்டு மாம்பழம் தேடும்
கூண்டில் அடைத்தால் வாடும்
குண்டு மாம்பழம் தேடும்
கூண்டில் அடைத்தால் வாடும்
கூண்டில் அடைத்தால் வாடும்

14.சின்ன சின்ன தக்காளி
சின்ன சின்ன தக்காளி
சிவப்பு நிற தக்காளி
சின்ன சின்ன தக்காளி
சிவப்பு நிற தக்காளி
வாயில் போட்டால் தித்திக்கும்
விற்றமின்கள் கொடுக்கும்
தம்பி நீயூம் நானுமே
பந்குப்போட்டு தின்னலாம்
தம்பி நீயூம் நானுமே
பந்குப்போட்டு தின்னலாம்

15.வண்ண வண்ண மீன்களாம்
வண்ண வண்ண மீன்களாம்
விளையாடும் மீன்களாம்
துள்ளியோடும் மீன்களாம்
தூங்காத மீன்களாம்
தண்ணீரிலே வாழும்
தரையில் போட்டால் வாடுமாம்
தண்ணீரிலே வாழும்
தரையில் போட்டால் வாடுமாம்

16.குட்டை குட்டை கத்தரிக்காய்
குட்டை குட்டை கத்தரிக்காய்
குண்டு குண்டாய் சுண்டங்காய்
நெட்டை நெட்டை முருங்ழககாய்
நீண்டு தொங்கும் புடலங்காய்
சட்டிப்பானை போலவே
தடித்திருக்கும் பரங்கிக்காய
பட்டை போட்ட வேப்பங்காய்
பச்சை நிற பாகற்காய்
செட்டையில்லா சுரைகாய்
செக்கும் நல்ல தக்காளி
கொடியில் nhங்கும் அவரக்காய்
கௌவை நிற மிளகாய்
வாட்ட சாட்ட வாழக்காய்
வந்துப்பார் என் தோட்டத்தில்
வந்துப்பார் என் தோட்டத்தில்

17.அங்கே பாரு சின்ன செடி

அங்கே பாரு சின்ன செடி
அழகாய் ஆடி அசையூது
இலையை எல்லாம்
பறித்துவிடால்
அதற்க்கு கூட வலிக்குமாம்
அதனால் சின்ன பாப்பா
இலையை பறித்து போடாதே
ஆதனால் சின்ன பாப்பா
இலையை பறித்து போடாதே

18.குண்டு குண்டு கத்தரிக்காய்

குண்டு குண்டு கத்தரிக்காய்
உருண்டையான சுண்டக்காய்
நீளமான முருங்கைக்காய்
நீண்டு தொங்கும் புடலங்காய்
பட்டை போட்ட வெண்டக்காய்
பச்சைநிற பாகற்காய்
கூட்டமாக வாருங்கள்
கொண்டு சென்று உண்ணலாம்
கொண்டு சென்று உண்ணலாம்

19.தத்தி தத்தி ஓடுமாம்
தாவி தாவி குதிக்குமாம்
முத்துப்போன்ற வெண்முயல்
முட்டை கண்கள் சிமிட்டுமாம்
காது நீண்ட வெண்முயல்
கால்கள் இரண்டும் குட்டையாம்
சாது போன்ற வெண்முயல்
சத்தம் கேட்டால் ஓடுமே
சத்தம் கேட்டால் ஓடுமே

20.வண்ணச் சிறகை விரிக்கிறய்
வண்ணச்சிறகை விரிக்கிறய்
வானில் பறந்து திரிகிறய்
வண்ண மலரின் தேனையே
வயிறு நிறைய குடிக்கிறய்
வானில் பறக்க உன்னைப்போல்
வண்ணச்சிறகு இல்லையே
வானில் பறக்க உன்னைப்போல்
வண்ணச்சிறகு இல்லையே
வண்ணச்சிறகு இல்லையே

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.